நாம் கற்பதும்,
கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம்
கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை
தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்; எமது தேசிய வருமானம் இந்த கல்வி முறைக்கு
வெளியில் இருந்து வருகின்றது. மக்களின் உழைப்பு, வாழ்வு

இன்று கல்வி தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள், கல்வியின் ஒட்டு மொத்த தேவையை, அதன் நோக்கை, அனைவருக்குமான கல்வியின் தேவையை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுவதில்லை. மாறாக குறுகிய நோக்கம், குறுகிய நலன்களை அடிப்படையாக கொண்ட தனிநபர் நலன் சாhந்த கருத்துகள் முன்தள்ளப்படுகின்றன. கல்வி என்பது என்ன? எதற்காக கல்வி கற்க வேண்டும்? கற்றதன் விளைவு என்ன? என்ற அடிப்படையான விடையத்தை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது தான் எமது நாட்டிற்கான, சரியான கல்விக் கொள்கையை வழிகாட்டும்.
நாம் இன்று கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இதன் பயன் என்ன? ஒரு
குடும்பம் முதல் ஒரு தனிமனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், கல்வியை
தி;ட்மிடும் அரசுக்கு இடையில் கூட பாரிய பிளவு காணப்படுகின்றது. இது ஏன்
நிகழ்கின்றது? இவற்றை எல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது
மட்டும் தான் நிகழ்கால தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமறைக்கும் சரியான ஒரு
கல்விக் கொள்கையை வகுக்க சமூகத்துக்கே வழிகாட்டும். இவற்றை மிகச்
சுருக்கமாக நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.
மனித சமுதாயத்தில் கல்வியின் வரலாறு என்ன?
இன்றைய நவீன கல்விக் கூடங்களின வரலாறு 150 வருடங்களுக்கு உட்பட்டதே.
அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை இது அடிப்படையாகவும் கொண்டிருந்தது.
ஆனால் இந்த நவீன கல்விக் கொள்கை அனைத்து மக்களுக்கும் இன்றுவரை கல்வியை
கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக கல்வி கற்றுக் கொடுப்பது
மறுப்புக்குள்ளாகின்றது. இது தேசத்தின் உள்ளேயும், தேசத்துக்கு வெளியேயும்
கல்வியை மறப்பதே ஜனநாயகமாகியுள்ளது. மறுபக்கத்தில் உலகமயமாதல் இன்று
கிடைக்கும் கல்வியை வர்த்தகமக்கி, கிடைக்கும் கல்வியை மறுக்கும் புதிய
பாதைக்கு உலக அரசகள் கையெழுத்திட்டுள்ளன.
கல்வியின் வரலாறு என்பது நவீன கல்விக் கூடங்களுக்கு வெளியில் இருந்தது. கால
காலமாக மனித இனம் குரங்கில் இருந்து தோன்றியது முதல் தொடங்குகின்றது.
குழந்தை பிறந்தது முதலே, தாய்யின் மடியில் வாழத் தொடங்கிய முதலே கல்வி
ஊட்டல் என்பது தொடங்கியது. கல்வியின் தேவை என்பது, இந்த சமுதாயத்தில்
வாழ்தளுக்கான அடிப்படையை வழங்குகின்றது. இயற்கையில் சார்ந்த வாழ்ந்த
மனிதன், சேர்க்கையில் உழைத்து வாழத் தொடங்கியது முதலே கல்வி மூலம்;
சமுதாயம் உழைப்பை ஒழுங்குபடுத்த தொடங்கியது. இயற்கையில் வாழ்ந்த போது,
கல்வி என்பது தனித்துவமிக்கதாக இருக்கவில்லை. பரம்பரை வழியாக, தன்னூர்வு
சார்ந்த துண்டதலுக்கு உட்பட்ட எல்லைக்குள், இயற்கை சார்ந்த அனுபவ வழிகளில்
அறிவு காணப்பட்டது. அதாவது மிருங்களின் இயல்பு நிலையைத் தண்டிவிடவில்லை.
ஆனால் மனிதன் உழைப்பைக் கொண்டு வழத் தொடங்கிய போது, அறிவு என்பது
இயற்கையின் எல்லையைக் கடந்த வளர்ச்சி பெறுகின்றது.
இங்கு மனிதன் உழைத்து வாழத் தொடங்கியது முதல், அனுபவ ரீதியாகவும் சமூக
ரீதியாகவும் கல்வி கற்றல் உறுதி செய்யப்பட்டது. அதாவது இயற்கை பற்றியும்,
இயற்கையை மாற்றி எப்படி வாழ்வது என்பது பற்றிய கல்வி, வாழ்வின்
வளர்ச்சியுடன் வளர்ச்சியுற்றது. இயற்கை பற்றி அறிவும், அதை மாற்றி அமைப்பது
பற்றிய அறிவு கல்வியாகவும், புதிய அறிவியலாக இன்று வரை அதன் தன்மை
மாறிவிடவில்லை. முடிவின்றி அறிவின் வளர்ச்சி உயர்ந்து செல்கின்றது. இந்தப்
போக்கில் என்றுமே, இன்றைய நவீன கல்விக் கூடங்கள் இதை கற்றுக்
கொடுக்கவில்லை. மாறாக சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு வழங்கிய
அறிவு துணை கொண்டு, இளைய தலைமுறை மூத்த தலைமுறை அறிவின் எல்லையை கடந்து
வளர்ச்சி பெற்றது. இத ஒரு பரஸ்பர இயங்கியல் விதியாகும்.
இது அனுபவவாத சார்ந்தும், நீண்ட தொடர்ச்சியாக பாரம்பரியமாக தலைமுறை சாhந்து
அறிவு வளர்ச்சி பெற்றது. உதாரணமாக நெருப்பு பற்றிய அறிவை எடுத்தால்,
சமுதாயத்தின் அனைத்து உறுப்பினருக்கும் அதை பெறத் தெரிந்து இருந்தது.
அன்றைய அறிவு நெருப்பை எப்படி பெறுவது என்ற வகையில், அதுவே கல்வியின் ஒரு
அடிப்படையான விடையமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நெருப்பை பெறும் முறை,
பொதுவான அறிவியலுக்கு தெரியாது. குறைந்த பட்சம், அன்று நெருப்பை எப்படி
பெற்றனர் என்பதும் கூடத் தெரியாது. அன்று ஒரு அறிவுமுறை இருந்தது. அது
சமுதாயத்தின் இருப்பின் மேல், சமுதாயத்தின் வாழ்வின் மேலான அறிவாக
காணப்பட்டது.
சமுதாயத்தில் அறிவியலின் வளர்ச்சியும், சமுதாயத்தின் தேவைகளும்
வளர்ச்சியுற்ற போது உழைப்பில் பிரிவினை உருவாகியது. உழைப்பின் பிரிவினையும்
அது சார்ந்த கல்வியும் பிளவுற்றது. அனைவரும் பெற்றிருந்த பொதுக் கல்வி,
என்பது உழைப்பு பிரிவினை சார்ந்து பிரிந்து செல்லத் தொடங்கியது. அறிவின்
அளவும் பண்பும் வேறுபட்டதாலும், சமுதாய நெருக்கடிகளின் போது சமுதாயம்
அழிந்துவிடும் அளவுக்கு, ஒன்றன் மீதான ஒன்றின் அறிவற்ற சூழலால் மனிதன்
பிழைத்துக் கொள்வதே கடினமாகியது. அதனால் சமுதாயம் கல்வி கற்றுக் கொடுத்தல்
என்ற வடிவத்தை உருவாக்கினர். பிரதான உழைப்பு அல்லாத மற்றையவற்றிலும்
கற்றுக் கொடுத்தல் சமுதாயத்தின் பொதுக் கடமையாகியது. இதன் மூலம் உழைப்பு
தலைமுறையின் தொடர்ச்சியின் வடிவமாக அல்லாமல், குருவின் வழிகட்டலுக்கு
உள்ளனது. இவையே சமுதாயத்தின் அன்றாட வாழ்வியல் போக்காகில் ஒரு அம்சமாகியது.
உழைப்பு பிரிவினையில் எற்பட்ட விலகல், அறிவில் எற்றத் தாழ்வை உருவாக்கியது
முன்பு பார்த்தோம்; ஆனால் உழைப்பு பிரிவினை ஒரு சமுதாய பிளவாக மாறிப்
பிரிந்த போது, அறிவு மறுப்பும் அதன் உட்கூறாகிவிடுகின்றது. புதிய உழைப்பு
மீதான அறிவு சமுதாயப் பிளவை வீரியமாக்கியது. இந்த அறிவு சமுதாய நலன் கடந்து
சிலரின் குறகிய நலன் சார்ந்த போது, அந்த அறிவு அனைவருக்கும்
மறுக்கப்பட்டது. புதிய அறிவு மூலதனமாகியது. அடிமைத்தனத்தக்கு ஒரு
நெம்பாகியாது.
கல்வி மறுப்பும் பிளவும்.
சமுதாயத்தில் எற்பட்ட பிளவு அறிவியல் பிளவாகியது. உற்பத்தி வடிவங்கள், நுகர்வு வடிவங்கள் மாறின. முன்பு அனைவரும் பெற்றிருந்த பொது அறிவு, உழைப்பின் மீதான அறிவு என்பது பிளவுபட்ட அமைப்பில் மறுப்பாக மாறியது. விவசாய சமுகங்கள் உருவான போதும், பின்னால் நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவான போது, மேலும் ஆழமான பிளவாகியது. உழைப்பின் பிரிவினை, கல்வியின் பரந்த அறிவியலை மறுப்புக்குள்ளாக்கியது. மாறாக அவர்களுக்கு உழைத்து வாழ்ந்த துறை சார்ந்த அறிவியலும், அது சார்ந்த அறிவின் வளர்ச்சியும் பொதுவாக உயாச்சி பெற்றது. சமுதாயத்தில் தத்தம் உழைப்பு சாhந்த அறிவும், அது சார்ந்த கல்வியும் எல்லா கிராமிய சமுதாயத்தில் காணப்பட்டன. இந்த அடிப்படைக் கல்வியற்ற சமூகம் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் உலகளாவில் இது சீரானதாக இருந்தது வந்தது.
உழைப்பு சார்ந்த கல்வி முறைக்கு வெளியில் உழைப்பு சராது வாழ்ந்த பிரிவு
ஒன்று உருவாகத் தொடங்கியது. ஆட்சியாளர்களாகவும், மதம் சார்ந்தம்.. உருவான
ஒரு பிரிவு உழைப்பு சாராத கல்விமுறைக்குள் தன்னை நிலைநாட்டத் தொடங்கியது.
உழைப்புக்கு வெளியில் கற்பனை சார்ந்து கல்வி உருவானது. கல்வி கற்றலில்;
எற்பட்ட திரிபு ஒன்று அக்கபக்கமாக சமுதாயத்தில் புரையோடியது. இந்த பிரிவு
தனது வாழ்க்கைகான ஆதாரத்தை உழைப்பவனிடம் இருந்து பெற்ற வாழ வேண்டியது
நிபந்தனையானது. எனவே உழைப்பவனிடம் இருந்து அவனின் உழைப்பை தனது வாழ்வு
ஆதாரத்துக்கு இலவாசமாகப் பெற, அடிப்படைக் கல்வியில் பிழற்ச்சி எற்பட்டது.
கல்வியில் பாரிய பிளவு உருவாகியது.
இவர்கள் உழைப்பின் வேறுபட்ட பிரிவுகளின் அறிவை தம் வசப்படுத்துவதன் மூலம்,
அறிவில் தம்மை மேன்மைப்படுத்த முடிந்தது. அத்துடன் தனது இருப்புச்:
சார்ந்தும், உழையாது வாழவும் அறிவை கற்பனையுடன் இனைத்து புனைந்தனர். இந்த
கற்பனையும், அனைத்து உழைத்து வாழும் மக்களின் அறிவையும் இந்த பிரிவு
தன்வசப்படுத்தியதன் மூலம், சில புதிய உழைப்பின் கருவிகளையும்
கண்டுபிடிப்புகளையும், அறிவையும் பெற முடிந்தது. இந்த அறிவு ஒரு மூலதனமாக
மாறியது. உழைப்பவனுக்கு முன், இந்த அறிவு அவனை உயர்த்தியது. இந்த அறிவை
சார்ந்து உழைப்பவனை அடிமைப்படுத்தவும், அவனுக்கு இதை கற்றுக் கொடுக்கும்
கல்வி முறைக்கு இது வித்திட்டது.
இந்த உழையாத பிரிவின் அறிவு ஆரம்பத்தில் உழைப்புக்கு வெளியில் உருவான
அறிவை, கற்றுக் கொடுக்கும் முறையே உருவானது. இது மதம், போர்ப் பயிற்சிகள்,
ஒற்றுவேலைகள் என்ற தொடங்கியது. உழைப்பை கற்றக் கொடுத்தல் என்பது
கல்விமுறையில் ஆரம்பத்தில் புகுத்தப்டவில்லை. அது பராம்பரியமாக சமுகங்களால்
தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் வடிவமே இருந்தன. அறிவில் எற்பட்ட பிளவு,
அறிவு மூலம் சமுதாயத்தில் உயாந்த நிலையில் வாழமுடியும் என்ற சமூக
அமைப்பில், அறிவு இரகசியமான ஒரு பாதுகாகப்பான மூலதனமாகியது. இதனால் கற்றுக்
கொடுக்க பணமும், சமுதாயத்தின் அடிமைத் தனத்துக்கு எற்ப ஒரு பகுதி
மக்களுக்கு கல்வி மறுப்பும் வித்திடப்பட்டது. கல்வி உழையாது மேல் உள்ளவனின்
வாழ்வை அழித்துவிடும் என்றால், கீழ் உள்ளவனுக்கு கல்வி மறுக்கப்படுவது
எதார்த்தமாகியது.
நவீன கல்வியின் தேவை
நிலப்பிரபுத்துவ அமைப்பில் சொந்த உற்பத்தி சார்ந்த அறிவு கடந்து அறிவைப்
பெறுவது, அடிமைத்தனத்தையே தகர்த்துவிடும் என்ற நிலை உருவானது. அறிவின்
கற்பனை வளர்ச்சியும், எதார்த்தம் சார்ந்த வளர்ச்சியும் அக்கபக்கமாக
வளர்ச்சியுற்ற போது, நிலப்பிரபுத்துவ அமைப்பும் மதமும் ஆட்டம் காணும் நிலை
உருவானது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பு நீடித்த 2000 வருடத்தில் மதம்
ஆட்சி பீடங்கள் ஆற்றிய பங்கு, எதார்த்த கல்வியை மதத்துக்க எதிரானதாகக் கூறி
மறுத்தன, ஒடுக்கின. அதாவது அறிவு சார்ந்த சிந்தனைகள் தடுக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டன. 2000 ஆட்டுகளுக்கு முன்பு உலகில் பல்வேறு நாடுகளில் எற்பட்ட
அறிவியல் வளர்ச்சி, தீடிரென முடக்கி மலடக்கப்பட்டது. அறிவின் எல்லையை மதம்
கடந்து செல்;ல அனுமதிக்கவில்லை. பொதுவான மதக் கல்வி கூட அனைத்து
மக்களுக்கு மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையை மக்களிள் செயல்லாக்கி அதில்
அழுந்தி வாழும் ஒரு சமுதாயத்தை படைத்தனர். ஆனால் நிலப்பிரபுத்துவ
அமைப்பினுள் உற்பத்தி வடிவத்தில் எற்பட்ட மாற்றம் கைத் தொழில் புரட்சிக்க
வித்திட்டது. அதாவது உழைப்பு மாற்றம் உற்பத்தியில் எற்பட்ட போது, பழைய
கல்வி முறையையும் அறிவுத் தளத்தையும் தகர்த்தது. இதன் போது, கடுமையான
போராட்டம் கல்வித் துறையில் நடந்தது. கடந்த 200 வருடங்களுக்கு முன்பும்,
அதை தொடர்ந்த ஆண்டுகளிலும் கல்வியும் அது சார்ந்த அறிவும் தொடர்பாக,
கடுமையான எதிர் எதிர் போக்குகள் நிலவின.
ஆனால் உற்பத்தி வடிவம் பழையதை முடிவுக்கு வரக் கோரியது. முதலாளித்துவ
உற்பத்தி முறை, தனது உற்பத்தி இயந்திரங்களை கையாளத் திறனுள்ள உழைப்பாளியைக்
கோரியது. இந்த வகையில் கல்வியைக் கோரியது. ஆனால் அனைவருக்குமான கல்வியை
அல்ல. தனக்கு தேவையானவனுக்கு மட்டும், அத்துறை சார்ந்து மட்டும் கோரியது.
அதே நேரம் சிறு கைத்தொழில்கள் பெரிய தொழிச்சாலைகள் வரை குழந்தை உழைப்பை
கோரின. அன்று நெசவு சார்ந்த உழைப்பில் நெசவு முதலாளிகள் குழந்தை உழைப்பை
கோரி வாதிட்ட போது "அவர்களது வேலைக்குரிய துணியின் மென்மையான இழை
நயத்துக்கு, விரல்களின் மெல்லிய தொடுநயம் தேவை இந்தத் தொழிற்சாலைகளில்
அவர்கள் பிள்ளைப் பிராயம் முதலே பழகினாலன்றி இந்தத் தொடு நயத்தைப்
பெறமுடியாது."" என்று கூறிய ஜனநாயக முதலாளித்துவம், குழந்தை உழைப்பை
நியாயப்படுத்தி வாதாடியது. இதற்கு பதிலளித்த மார்க்ஸ் "குழந்தைகள் முழுக்க
முழுக்க அவர்களின் மெல்லிய விரல்களுக்காகவே வதைக்கப்பட்டனர்"" என்றார்.
அவர் மேலும் கூறும் போது "இந்தக் கல்வி சரத்துக்களுக்குத் தொழிலதிபர்களே
காட்டுகின்ற எதிர்ப்பு, அவற்றை எய்ப்பதற்காக அவர்கள் கையாளும்
தந்திரங்களும் சூழ்ச்சிகளும் ஆகிய இவை யாவற்றிலும் முதலாளித்துவப்
பொருளுற்பத்தியின் ஆன்மா கண்கூடாக தெரிகிறது."" என்று இந்த ஜனநாயகத்தின்
முகத்தைக் கிழித்தெறிந்தார்.
போலித்தனத்தையும், கருணையையும் நியாப்படுத்தும் போது, மார்க்ஸ் அதன்
வக்கிரத்தை அம்பலப்படுத்தினார். ஹாலந்தில் வறியோர் இல்லமொன்றில் நான்கு
வயது குழந்தை வேலைக்கமர்த்தப்பட்ட விதத்தை 17 ஆவது நூற்றாண்டில்
"அன்புள்ளம் கொண்ட" வாணிப நேயர்கள் "களிப்புடன்" விவரிக்கின்றனர்
என்பதையும் "நடைமுறை நற்பண்பு" என்பதன் உதாரணங்கள் ஆதாம் ஸ்மித்தின் காலம்
வரை மெக்காலே பாணியிலான எல்லா மனிதாபிமான நூல்களிலும் எடுத்தாளப்படுகிறது.
சிறுவருக்கு வேலை கொடுத்தல் மனிதபிமான செயலாக அறிவுத்துறை நியாப்படுத்தி
குழந்தை உழைப்பை பாதுகாத்தனர். அன்று முதல் முதலாளித்துவத்தின் மனிதாபிமான
எச்சில்கள் மீது புகழாரங்கள் சூட்டப்பட்டதை மார்க்ஸ் கேலி செய்கின்றார்.
நாம் எமது ஊர்களில் வேலைக்கு அமர்த்தும் சிறுவர் சிறுமிகளுக்கு செய்யும்
உபதேசங்களில், மனிதபிமான ஏஜாமானின் கொடூரங்களை மூடிமறைத்து புகழ்வதை
அன்றாட காணமுடியம். அன்று கத்தோலிக்கச் திருச்சபை குழந்தைகளின் கல்விக்கான
அடிப்படைக் கோரிக்கையை நிராகரித்து, புனிதத்தின் மகிமையை நிலைநாட்ட
முயன்றது. நியூயோர்க் திருச்சபை "கல்விக்கான மசோதா பெற்றோர்களின் உரிமையைப்
பறிக்கின்றது (இது இன்று பெண்களின் கரு அழிப்புக்கு உடல் சுதந்திரம்
என்பது போல்) என்றும், குடும்ப வருமானத்தை குறைப்பதன் மூலம் வறுமை
உருவாகும் என்றும் (இன்று வறுமைக்கு காரணம் அதிக குழந்தைகள் என்ற காரணம்
போல்) வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்த்தனர்.""
இப்படித் தான் கிறிஸ்துவப் புனிதம் வக்கரித்தது. பிரஞ்சுப் புரட்சி பற்றி
அறிந்த ஆஸ்திரிய அதிகாரிகளும், திருச்சபையும் "அரசு நடத்தும் பாடசாலை கல்வி
இளம் குழந்தைகளை, வேகம் நிறைந்த உள்ளங்களை, மனிதாபிமானம் என்ற போர்வையில்,
அழிவை ஏற்படுத்தும் சிந்தனைகளால் ஈர்க்கின்றனர். இந்தச் சிந்தனைகள்,
மிகவும் கீழ்மட்டத்து மக்களுக்கும் பரப்பப்பட்டு, அது மேலும் அடிவரை ஊடுருவ
முயல்கின்றனர்"" என்று 1793 இல் அரசருக்கு எச்சரிக்கும் வகையில் எழுதினர்.
இப்படி நவீன கல்வி தோன்றிய வரலாற்றில் அடுக்கடுக்காக பல உதாரணங்களைக்
காட்ட முடியும்.
கல்வி சுய சிந்தனைக்கு அடித்தளமிடுவதால், நிலவுகின்ற அமைப்பும் அதன் தயவில்
நீடிக்கும் உயர் வர்க்கங்களின் ஆட்சியும் தகர்ந்துவிடும் என்ற அச்சம்
பீதியாகிய போது, பொது கல்வி எதிர்ப்பு உருவானது. முதலாளிகள் குறைந்த
கூலிக்காக குழந்தை உழைப்பை வலியுறுத்தினர். அத்துடன் அடங்கிப் ஒடுங்கிப்
போகும் குழந்தைப் பருவத்தை விரும்பினர். குழந்தைப் பருவத்தில் இருந்தே
உழைப்பை திணித்தால், உழைப்பில் இயந்திரமாகிவிடும் மந்தைக் குணத்தை
நேசித்தனர். இதனால் குழந்தைக்கான கல்வியை எதிர்த்தனர். மறு தளத்தில் நவீன
உற்பத்தி கருவிகளை இயக்கும் நவீன அறிவுள்ள இயந்திர உழைப்பாளியைக் கோரியது.
இதுவே கல்வி என்ற கோரிக்கைக்கு அத்திவாரமாகி போராட்டமாகியது. கைத்தொழில்
புரட்சி இந்த கல்விக்கான அத்திவாரத்தையிட்டது. உழைப்பில் இருந்து
அன்னியமாகிய மக்களையும், அது சார்ந்த அறிவற்ற குழந்தைகளையும், நவீன கல்வி
கூடங்களில் கொண்டு வந்தனர்.
இங்கு குழந்தைக்கு நவீன இயந்திரங்களை இயக்கும் அறிவையும், உழைப்பையும்
பகுதியாக கொண்ட கல்வி முறையே ஆரம்பத்தில் கொராப்பட்டது. இந்த கல்வி
உழைக்கும் இயந்திரத்தின், ஒரு உழைப்பு கருவியை உற்பத்தி செய்தது.
இயந்திரத்தில் சதையுள்ள ஒரு உறுப்பாக, இயந்திரத்தின் ஒரு கருவியாக கல்வி
மனிதனை மாற்றியது. இந்த கல்வி முறை சமுதாய நலன்களில் இருந்தும் சரி, அதன்
நலன் சார்ந்து உருவாக்கப்படவில்லை. இது இன்ற வரை நீடிக்கின்றது.
இந்திரத்தின் உறுப்பாக, உற்பத்தி கருவிகளை இயக்கும் ஒரு இயந்திரமாக
இயங்கும் உறுப்புகளையே இன்றைய கல்வி முறை உருவாக்கின்றது. இதைச்
சுற்றித்தான் மொழி முதல் மற்றையை அனைத்து அறிவும் கட்டமைக்கப்படுகின்றது.
இந்த கல்விமுறை சரியானதா?
நிலவும் கல்வி முறை தவறனது. ஏன்?
கல்வி முறை தவறானது என்கின்ற போது, அது உலகளாவிய வகையில் தவறானவையாகும்.
சிலர் மேற்கு கல்வி உயர்ந்தது என்றும், மூன்றாம் உலக கல்விக்கு மாற்றாக
முன்னிறுத்துகின்றனர். உண்மையில் கல்வி பற்றி அடிப்படை நோக்கத்தை புரிந்து
கொள்ளாத வரை, தவறான கல்விக் கொள்கைக்கு வக்காளத்து வாங்குவது தொடராவே
செய்யும்.
ஒரு கல்விக் கொள்கை தவறானது என்று சொல்லும் போது, எதை அடிப்படையாக கொண்டு
இதை நாம் புரிந்து கொள்வது என்பது மிகமுக்கியத்துவம் வய்ந்தது. இங்கு ஏன்
நாம் கல்வியை கற்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் போது இதற்கான விடை
கிடைக்கின்றது. கல்வி ஏன் கற்கப்பட வேண்டும் என்ற பார்வையில் இரண்டு
போக்குகள் காணப்படுகின்றது.
1.தனிப்பட்ட மனிதன் கல்வி கற்பதன் மூலம், பணத்தை சம்பதிக்கலாம்.
2.நவீன உற்பத்தி இயந்திரங்களின் இயக்கும், சதையுள்ள மனிதக் கருவிகளை உருவாக்க முடியும்.
இந்த உள்ளடகத்தில் தான் இன்றைய நவீன கல்விக்கான அடிப்படை பூர்த்தி செய்யப்படுகின்றது. இங்கு கூலிமுறை இதன் ஆதாரமாக உள்ள நிலையில் இது நியாப்படுத்தப்படுகின்றது. தனிப்பட்ட இரண்டு நேர் எதிரான நிலையில் உழைப்பு பற்றி கண்ணோட்டம் சார்ந்து, இவை இரண்டும் சுய நலன் சார்ந்து கல்வி அங்கிகரிக்கப்படுகின்றது. இந்த பத்திரத்தை ஆற்றும் நபர்களுக்கிடையிலான தனிபட்ட நலன்களும், அவை ஒன்றை ஒன்று சார்ந்தும் இந்த அமைப்பு நீடிக்கின்றது. இந்த சுழற்சிக்குள் தான் ஒட்டு மொத்த கல்வியும் உலகளாவில் திட்டமிடப்படுகின்றது. இந்த எல்லையை சுற்றி இதற்கு சேவை செய்யும் உறுப்புகளையும் இன்றைய கல்வி உருவாக்கின்றது.
இதனால் சில தனிப்பட்ட மனிதனும், தனிப்பட்ட முதலாளியும் சுய லாபம்
அடைகின்றனர். பரந்துபட்ட மக்களுக்கு இந்த கல்வி அவர்களுக்கு எதிராக
மாறிவிடுகின்றது. கல்வி சமூகத் தேவைக்கு எதிரானதாகவே செயல்படுகின்றது.
கல்வியின் அடிப்படை நோக்கம் திட்டவட்டமாக சமூகத் தேவையில் இருந்து, அதை
மையமாக வைத்த உருவாக்கப்பட வேண்டும். இயற்கையில் உன்னதமான இயங்கியலை
அனுசரித்தே, இந்தக் கல்வி தன்னை வளப்படுத்த வேண்டும்;. மக்களின், நாட்டின்;
சமூகத் தேவைகளை நோக்கி கல்வி முன்னேற வேண்டும்;. தனிப்பட்ட எல்லா மனிதனைப்
பற்றியும், ஒட்டுமொத்த கல்வி சிந்திக்க வைக்கவேண்டும்;. நான் எனது என்று
சுற்றி வரும் கல்விக்கு பதில், சமூகம் அதில் நான் என்ற கல்வி முறைக்கு
முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதில் தான் தனிமனிதனின் கல்வி
முக்கியத்துவம் பெற வேண்டும்.
இன்றைய கல்வி மற்றைய மனிதனுக்கு எதிரானதாக கற்றுத் தரப்படுகின்றது. இயற்கை
அழிப்பை எப்படிச் செய்வது என்பதையே, கல்வி சூறையாட கற்றுக் கொடுக்கின்றது.
இன்றைய கல்வி எகித்திய கோபுரங்கள் போல் ஒரு சிலரை உயரத்திலும், அடியில்
பலரையும் புதைத்துவிடுகின்றது. மனிதப் பிளவையே இன்றைய கல்வி தனது
அத்திவரமாகக் கொள்கின்றது. இயற்ககையில் இருந்து விலகிய மனித வாழ்வை
உன்னதமாக காட்டுகின்றது. அதாவது வரைமுறையற்ற சூறையாடலையே மனித நாகரிகத்தின்
இலட்சியம் என புகட்டுகின்றது. நான் சுதந்திரம் பெற்றவன் என்ற வரையறை,
மற்றவனுக்கு மறுப்பை நியாப்படுத்துகின்றது. ஜனநாயகம் என்ற வரையறை, ஜனநாயக
மறுப்பை நியாப்படுத்துகின்றது. அனைவருக்கும் ஜனநாயகம், சுதந்திரம் என்றால்;
அது அhத்தமிழந்து விடுகின்றது அல்லவா! ஆனால் கல்வி இதை மறுத்து, மறுப்பை
அத்திவாரமாக்க பிளவை நியாப்படுத்தக் கோருகின்றது. மற்றவனை அடிப்படுத்தி
வைப்பதே சுதந்திரம், ஜனநாயகம் என்று இன்றைய கல்வி போதிக்கின்றது. இப்படி
விரிந்த தளத்தில், நவீன கல்வி மனித இனத்துக்கு எதிரானதாகவே கற்றுத்
தரப்படுகின்றது. உலகின் உயிரணம் அனைத்துக்கும் எதிராகவும், இயற்கைக்கு
எதிராகவும் கூட கற்றுத் தரப்படுகின்றது. மனித இனத்துக்கு எதிரான சுயநலமே
கல்வியின் அத்திவாரமாக்கி அனைத்தும் நியாப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இந்தக் கல்வியைக் கூட உலகளவில் அனைத்து மனிதர்களுக்கும் மறுப்பது
இன்றும் கூட எதார்த்தமாக உள்ளது. இதுவும் கூட இந்தக் கல்வி முறையில்
குறிப்பான கற்பித்தலின் இருந்தே மறுக்கப்படுகின்றது. கல்வி மறுப்பு என்பது
உலகளாவில் வாழ வழியற்ற நிலையில் தொடங்கி, கற்கும் மாணவனைப் பார்த்தலே
திட்டு என்ற கூறி பாடசாலைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில், 15 வயதுக்கு
குறைந்த 25 கோடி குழந்தைகள் உடல் உழைப்பில் வதைக்கப்படுகின்றனர். சர்வதேச
தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 10க்கும் 14 வயதுக்கு
உட்பட்ட 7.3 கோடி குழந்தைகள், அதாவது உலகக் குழந்தைகளில் 13 சதவீகிதத்தினர்
கடுமையான உடலுழைப்பில் வாழ, இந்த ஜனநாயக உலகம் நிர்ப்பந்திக்கின்றது. 10
வயதுக்கு உட்பட்ட மற்றும் வீட்டில் வேலைக்காரராக வேலை செய்யும்
குழந்தைகளின் எண்ணிக்கை இதற்குள் உட்படுத்தப்படவில்லை. தொழில்த்துறை
சார்ந்த இந்த புள்ளி விபரமே பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது 15
வயதுக்கு கீழ்ப்பட்ட 25 கோடி குழந்தைகள் கண் விழித்தவுடன் உடலுழைப்பில்
ஈடுபடுகின்றனர். இதை கூர்மையாக விரிவாகவும் பார்த்தால் 10 கோடி குழந்தைகள்
பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடிக் குழந்தைகள்
பட்டினியுடன் படுக்கைக்கு செல்லுகின்றனர். 3 கோடிக் குழந்தைகள் வீடற்ற
நிலையில் வீதியில் படுத்துறங்குகினறனர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள்
வருடம் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால்
மரணத்தின் பிடியில் ஒவ்வொரு வருடமும் சிக்கி தவிக்கின்றனர். தாய்ப்பால்
கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும்
உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 லட்சம் குழந்தைகளின் உயிரை உடனடியாக
பாதுகாக்க முடியும். யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10
லட்சம் ஆண் பெண் குழந்தைகள் பாலியல் சந்தையில் பாலியல் தேவைகாக
மூலதனமாக்கப் படுகின்றனர்.
குழந்தைகளையிட்டு அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில் 1990இல் 2.5 லட்சம்
குழந்தைகள் கொரில்லாப் போராட்ட களத்தில் இயங்கினர். 1984க்கு முந்திய பத்து
வருடத்தில் 50 லட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது
கொல்லப்பட்டனர். 50 லட்சம் குழந்தைகள் வதிவிடத்தை இழந்தனர். 1995 களில் 18
வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 லட்சம் சிறுவர்களை புலம் பெயர்ந்த அகதி
முகாங்களில் அல்லாட வைத்துள்ளது. கடந்து சென்ற 10 வருடத்தில் 20 லட்சம்
குழந்தைகளை கொன்ற தனிமனித சுயநல ஜனநாயக அமைப்பு, 40 முதல் 50 லட்சம்
குழந்தைகளை ஊனமாக்கியுள்ளது. இப்படி குழந்தைகள் அவலம் இருக்கம் நிலையில்,
கல்வி கூடங்களைப் பற்றிய எமது சிந்தனை இவை உள்வாங்கமல் முன்னேற முடியாது.
உலக வர்த்தக அமைப்பு, மற்றும் யுனிசேவ் அறிக்கைகளின் படி 1990களின் குழந்தை மரணத்தை பார்ப்போம்.
காகுலான் இருமல் - 5.1 லட்சம்
சிசு தலைவிறைப்பு ஜன்னி - 7.9 லட்சம்
மலேரியா - 10 லட்சம்
மணல்வாரியம்மை - 15.2 லட்சம்
இதர சுவாச நோய் - 22 லட்சம்
வயிற்றுப்போக்கு நோய் - 40 லட்சம்
இதர காரணம் - 42 லட்சம்
சிசு தலைவிறைப்பு ஜன்னி - 7.9 லட்சம்
மலேரியா - 10 லட்சம்
மணல்வாரியம்மை - 15.2 லட்சம்
இதர சுவாச நோய் - 22 லட்சம்
வயிற்றுப்போக்கு நோய் - 40 லட்சம்
இதர காரணம் - 42 லட்சம்
மக்கள் விரோத தனிமனித சுயநலனை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தில் ஒவ்வொரு
வருடமும் கோடிகணக்கில் குழந்தைகள் இறந்து போகின்றனர். 1993 இல் தொற்று
நோய்கள் காரணமாக 165 லட்சம் மக்கள் (இங்கு சில நாடுகளில் தொற்று நோய்
சாதாரண இறப்பாக மதிப்பிடுவதால் இறப்பு அதிகமாகவே இருக்கின்றது.) இறந்து
போனார்கள். ஆனால் யுனிசேவ் இந்த அவலத்தை சுட்டிக் காட்டும் போது, எமது பொது
புத்தி மட்டத்தில் நாம நியாப்படுத்தி; செய்யும் கேளிககைளையும் அதற்கு
இசைந்து போகும் தன்மையையும் அம்பலப்படுத்தியது. 1995 இல் ஒரு அறிக்கையை
முன்வைத்தது. அதில் உலகளவில் வருடம் ஆரம்ப கல்விக்கு 1300 கோடி டொலரும்
செலவு செய்;யும போது, சிகரெட்டுக்கு 40000 கோடி டொலரும், குடிக்கு (பீர்,
வைன்) 24500 கோடி டொலரும், கோல்ஃப் விளையாட 4000 கோடி டொலரும்,
இராணுவதுக்கு 80000 கோடி டொலரும் பயன்படுத்துவதை அம்பலப்படுத்தியது. இந்த
அமைப்பில் கல்வியின் அவலம், வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகின்றது. நாம்
உலகாளவில் கல்வியின் நிலையை, அதன் அவலத்தை புரிந்த கொள்ளமால் குறைந்த
பட்சம் சரியான கல்விக் கொள்கைக்கான ஆரோக்கியமான ஒரு வழிகட்டுதலைச் செய்ய
முடியாது.
உலகாளவிய நிலமை என்பது இலங்கையளவிலும் கூட விதிவிலக்கின்றி பொருந்தும்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் கூட பொருந்திவிடுகின்றது. ஒரு பாடசாலையைச் சுற்றி
கல்வி மறுப்பு முதல் தவறான கல்விக் கொள்கை வரை புரையோடிக் கிடக்கின்றது.
இதை நாம் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிவிடுவதன் மூலம், அர்ப்பத்தனமான
வக்கிரத்தைத் தாண்டி கல்வியை வேறு எந்த வகையிலும் விளக்கமுடியாது.
இலங்கையில் கல்வி
இலங்கையின் கல்வியே ஆசியாவில் முதன்மையான இடத்தை வகிப்பதாக கூறும்
வாதங்களைத் தாண்டி, உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. இங்கு பரந்தளவில் கல்வி
மறுப்பக்குள்ளாகும் நிலைமையே விரிந்த அளவில் காணப்படுகின்றது.
1.வறுமையால் குழந்தைகள் சொந்த உழைப்பில் வாழ வேண்டிய சமூக பொருளாதார நிலைமை.
2.சாதிய ஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலைமை.
3.இனஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலமை.
4.தவறான கல்விக் கொள்கையால் கல்வியைத் தொடர முடியாது கல்வியை பாதியில் விடும் அவலநிலமை
5.எமது பண்பாட்டு, கலாச்சாரத்தின் தவாறான பார்வை மற்றும் கோளறுகளால் கல்வியை இடையில் கைவிடும் அவலம்.
6. உயர்தரக் கல்வி தொடருவதை மறுக்கும் அரசு.
இப்படி பட்டியல் நீண்டு செல்லுகின்றது. இங்கு சமூகத்தின் அடிப்படைப் போக்கில் ஒரு முரண்நிலையாக, கல்வி மறுப்பு சாதிய ஒழுக்கு முறையால் எழுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த சாதியம், கல்வியில் ஒரு பகுதி மக்களை உரிமையற்றவராக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் நுழையவே தடை எமது சமூகம் கடைப்பித்து வருகின்றது. ஊருக்குள் நுழைந்தால் அதுவே ஊரைத் தீட்டாக்கிவிடும் என்ற எமது சமூக அமைப்பில், ஊருக்குள் உள்ள பாடசாலை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அந்த மக்களை கீழான நிலையில் வாழவைத்தனர். அந்த மக்களுக்கான கல்வி மறுப்பு என்பது, எமது சிந்தனை மற்றும் கல்வி முறையில் சாதியப் போக்கில் ஊறிக்கிடக்கின்றது.
சாதியம் சார்ந்து மறுக்கும் கல்விக்கான அடிப்படை குறிப்பாக இந்தியாவில்
இருந்து இந்து மதம் சார்ந்து உருவாகின்றது. இது வேறு எந்த நாட்டிலும்
கிடையாது. சாதி அமைப்புக்கு முன்பு வர்ணங்கள் இருந்த போது, குருகுலக் கல்வி
முறை இருந்தது. இங்கு கல்வி என்பது ஆசிரியா கற்றுக் கொடுத்த போது, எந்த
பகுபாடும் யாருக்கும் இருக்கவில்லை. கல்வி கற்ற பின்பு ஆசிரியர் தான்
மாணவரின் திறமைக்கும் ஆற்றலுக்கும் எற்ப வர்ணங்களை பிரித்து தொழிலை
வகைப்படுத்தினார். இதுவே பின்னால் தந்தை வழியாக தொழில் மற்றும் வர்ணம்
நிர்ணயமான போது அதுவே சாதியானது. வர்ணம் கடந்த திருமணம் மற்றும் கலந்த
உண்ணலும் தடைசெய்யப்ட்டது. தந்தையே கல்விக்கான குருவானாh. பின்னால்
குருகுலங்களுக்கு மாணவர்கள் அனுப்பபட்ட போது, முன் கூட்டியே வர்ணமும்
தொழிலும் தந்தையால் நிர்ணயம் செய்யப்ட்ட குறித்த தொழில் மட்டும் கற்றுத்
தரப்பட்டது. இந்த வர்ணத்தில் இருந்து சாதியாக பரிணமித்த பொது, கல்வியில்
எற்பட்ட முக்கியமாற்ற இதுவாகும்.
1.இது மாணவன் எதைக் கற்பது என்ற சுதந்திரத் தெரிவை மறுத்தது.
2.கல்வியை பரம்பரை ரீதியாக வகைப்படுத்தியதால், கல்வி அனைவருக்கும் கற்றுக் கொடுப்பது மறுப்புக்குள்ளாகியது
இது இன்றுவரை பல மற்றங்களுடாக அடிப்படையான நோக்கம் மாறமல் நீடிக்கின்றது. கல்வியை பிறப்பை அடிப்படையாக கொண்டு பிரிந்ததுடன், அதனால் எறப்பட்ட முரண்பாடுகள் போராட்டங்கள் சாதியத் தீட்டாக நியாப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி மறுப்பு ஒரு நிகழ்ச்சி நிரலாகியது. இதை விரிவாக நான் சாதிய அமைப்பு பற்றி எழுதும் எனது நூலில் காணமுடியும்.
இந்த தீட்டு கல்வி மறுப்பாக நவீன கல்வி முறையில் தொடருகின்றது. இன்றைய எமது
கல்வி பற்றிய அடிப்படையான மாறுதாலாக, நிச்சயமாக கல்வி மறுக்கப்பட்ட
சதிகளுக்கு கல்வியை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது சார்ந்த பண்பாட்டு
கலாச்சார அனைத்து சமூகப் பிளவுகளையும் நீக்கவும், அதை கல்வியில் கொண்டு வர
வேண்டியது அவசியமானதாகும். அதாவது கல்வி மறுக்கப்படும் அனைத்து இளம்
குழந்தைகளில் கல்விக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில், நாம் நிச்சயமாக
போராட வேண்டியவராக உள்ளோம். இதற்கு தடை எந்த வகையில் இருந்தாலும், அதற்கான
சமூக காரணத்தை மாற்ற நாம் போராட வேண்டியவராக உள்ளோம்.
இன்று இலங்கையில் மொத்தமாக 10590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள்
10042 ஆகும்;. இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட
பாடசாலையாகும்;. மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5
வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.
இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 180000 யாகும். 1996 இல்
இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7
லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. பாடசாலை செல்வோரில்; 1
முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம் மாணவர்கள் கற்கின்றனர். 6 முதல் 11 வரை 21
லட்சமும், 12 முதல் 13 வரை 2 லட்சம் மணவர்களும் கற்கின்றனர். ஆரம்ப
பாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக்
கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது
எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வியை தொடாகின்றனர். 97
சதவீதமானவர்களுக்கு உயர்தரக் கல்வி மறுக்கப்படுகின்ற நிலையில், எமது
கல்விக் கொள்கை சரியானதா?
இன்றைய எமது கல்விக் கொள்கை
பொதுவாகவும் மேலேந்த வாரியாக பேசும் பொருளாக, இதுவே வெற்று அரட்டையாக
விடும் இந்த விடையம், மிகவும் விசனத்துக்குரியதாகும். லட்சக்கணக்கான
மாணவர்களின் வாழ்வை அன்றாடம் சிதைத்துவிடுகின்ற இன்றைய கல்விக் கொள்கை,
ஒட்டுமொத்தமாகவே ஒரு சிலரை உருவாக்கி காட்டும் அடிப்படைக் கண்ணோட்டத்துடன்
பின்னப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு தனிமனிதனின் சுயநலன் என்ற எல்லையில்
தொடங்கும், லட்சியக் கனவுடன் இது நியாப்படுத்தப்படுகின்றது. லட்சக்கணக்கான
மாணவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தெரிந்து எடுக்கும்
முடிவில், மனித அவலம் தொடங்குகின்றது.
இலங்கையில் கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறுவேர் அண்ணளவாக 0.82
சதவீதத்தினர் மட்டுமேயாகும். இதில் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" மிகச்
சிறிய அளவே. அண்ணளவாக 0.12 சதவீதமாகும். இன்று பல்கலைக்கழகத்துக்கு
செல்லும் உயர்தர பரிட்சை எழுதுவோரில் அண்ணளவாக 41 சதவீதம் பேர் சித்தி
பெற்று, செல்லும் தகுதியைப் பெறுகின்றனர். ஆனால் பரீட்சை எழுதுவோரில்
அண்ணளவாக வெறும் 4.7 சதவிதம் பேர் தான் அனுமதி பெறுகின்றனர். உண்மையில்
உயர்தர வகுப்புக்கு நுழைய முடியாதவர்கள், இடை நடுவில் கல்வியை
கைவிடுபவர்கள், கல்வியை கற்ற முடியாத சமூக பொருளாதார வாழ்வைக் கொண்டவாகள்
என்ற விரிந்த தளத்தில் ஆராய்ந்தால், இலங்கையின் கல்வி முறையின் வெட்க கேடான
பரிதபாம் நிர்வாணமாகும்; இதலும் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" என்ற
கனவுடன் கல்வியின் வெற்றியை பறைசாற்றும் எமது சமூக மனநிலை, உண்மையில்
இலங்கை கல்வியின் தோல்வியை மட்டுமல்ல அதன் போலித்தனமும் வெட்வெளிச்சமாவது
தவிர்க்க முடியாது. இதை சற்று விரிவாக ஆராய்வோம்.
அனைவருக்கும் கல்வி மறுக்கப்படுவதே, எமது கல்விக் கொள்கை
உயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடையவர்களில் 2 சதவீதமானவர்களே உயர்
கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு
நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40
கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில்
கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில்
உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக
உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை
முடிக்கின்றனர். இது உங்களுக்கு ஆச்சரியமான விடையமாக இருக்கலாம். ஆனால்
எதார்த்தம் அதை மீறியது அல்ல. ஆனால் அதை நாம் கண்டு கொள்வதில்லை. எமது
போலித்தனமான வீம்பு வம்பு பேச்சுகளால் உண்மைகளை குழி தோண்டி
புதைக்கின்றோம்.
இலங்கையில் 1995 இல் உயர்கல்வி 100 மாணவருக்கு 2 முதல் 5 மாணவருக்கே ஒட்டு
மொத்தமாக கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக
மறுக்கப்படுகின்றது. ஒவ்வொரு 100 மாணவனும் இந்த எல்லைக்குள் தான்
போராடுகின்றான். 2 முதல் 5 மாணவன் இறுதியாக உயர் கல்வியைத் தொடர,
மிகுதியானவர்கள் எந்த விதமான சமூக வழிகாட்டுதலும் அற்ற, வெற்று சமூகத்தில்
விசப்படுகின்றான். அவனின் கடந்த கால கல்வியுடன் தொடர்பற்ற வகையில்
வாழ்க்கையில் அல்லாடுகின்றான். அவனின் இளைமைக் கால கல்வி வாழ்வுடன்
தொடர்பற்ற வகையில் இருப்பது, எமது கல்விக் கொள்கையின் அடிப்படையான தாவறாக
உள்ளது. வாழ்வுடன் சம்பந்தமல்லாத கல்வி, விரையமானது, அர்த்தமற்றது அல்லவா!
100 மாணவனுக்கு 2 முதல் 5 மாணவனின் உயர் கல்வியை எடுத்தால், இங்கும் கூட
கடுமையான தவறான கல்விக் கொள்கை காணப்படுகின்றது. இது பல்கலைக்கழகம் முதல்
மற்றைய அனைத்து உயர்கல்வி வரை காணப்படுகின்றது. இந்தக் கல்வி என்பது 95
சதவீதமானவர்கள் மேல் எப்படி ஒரு அடக்குமுறையை அடிமைத்தனத்தையும் நிலை
நாட்டுவது பற்றியதாக அமைகின்றது. அதாவது இலங்கையை ஆளுகின்ற அதிகார
வர்க்கத்தை மையமாக வைத்து, மற்றவர்களுக்கு கல்வியை எப்படி மறுப்பது என்ற
உள்ளடகத்தில் கல்வி போதிக்கப்படுகின்றது. உயர் கல்வி அதிகார
வர்க்கத்தையும், சமூகத்தை பொய்களும் போலியான மனப்பங்களை எற்படுத்தும்
கௌவுரவ பிரஜைகளையும் உருவாக்கின்றது. சமூக நலன் சார்ந்த வழிகாட்டிகளை
உருவாக்குவதில்லை.
14 சதவீதமான இலங்கைக் குழந்தைகள் பாடசாலைக்கே செல்வதில்லை
அண்ணளவாக இலங்கையில் 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில்
சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும், விபச்சார விடுதிகளிலும் அடிமைகளாக
வாழ்கின்றனர். அடிப்படையான சமூகத் தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார
பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத
சூழலில் சிதிலமடைகின்றனர். இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்;
14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில்
பிறக்கின்றனர். உடல் உழைப்பு பொதுவான தலைவிதியாகின்றது. உழைத்தே தன் அரை
வயிற்றுக்கு கஞ்சியைத் தன்னும் குடிக்க முடியும் என்ற மனித அவலம். இதற்கு
வெளியில் உல்லாச வாழ்வை வாழ விரும்பம் வெள்ளைப் பன்றிகளுக்கு, உள்நாட்டு
பாலியல் வக்கிரங்களுக்கு வக்கிரத்தைத் தீர்க்கவும் குழந்தை விபச்சாரம்
சந்தையில் கொடி கட்டிப்பறக்கின்றது. பிஞ்சியில் அப் பச்சிளம் குழந்தைகளை
கருக்கி, அவர்களின் மென்மையிலும் இனிமையிலும் எமது தேசமும் எமது கல்வியும்
வளர்ச்சியுறுகின்றது.
கல்வி கற்போரை எடுத்தால் அங்கும் இந்த அவலம் பகுதியாகி ப+ரணமடைகின்றது.
கல்வி கற்போரில் பெரும்பான்மையான குழந்தைகள் கல்வி அல்லாத நேரத்தில் உடல்
உழைப்பில் பெற்றோருடன் பங்கு கொள்கின்றனர். சிந்திக்கவும், செய்படவும்,
உற்சாகமாக விளையாடவும் வேண்டிய குழந்தைப் பருவம், கடுமையான வறுமையுடன் கூடய
உடல் உழைப்பில் வதைக்கப் படுகின்றது. இது உயர் கல்வியை நோக்கிச் செல்லும்
பொது, அங்கும் இது ஒரு தலைவிதியாகின்றது. இவற்றை சில புள்ளிவிபரங்கள் மூலம்
ஆராய்வோம்.
எமது கல்வியில் வடித்தெடுத்த உருவான "கௌவுரவமான" குடும்பங்களில், 1.5
லட்சம் சிறார்கள் இலங்கையில் வீட்டு வேலைகளில் வேலைக்காரராக நசிகின்றனர்.
கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் 2.2 லட்சம் சிறுவர்கள் வீதியில்
வாழ்கின்றனர். "கௌவுரவமான" குடும்பங்கள் அணியும் தங்க ஆபரணங்களின்
பின்னால், நெஞ்சை பிழியும் குழந்தை உழைப்பு அகோரமாக உள்ளது. இந்த உழைப்பில்
உள்ள 7 வயது முதல் 14 வயதுடைய 90 சதவீதமான குழந்தைகள் தமது கல்வியை ஒரு
வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே கல்வி கற்றவராக உள்ளனர். "கௌவுரவமான"
குடும்ப ஆண்களுக்கு அழகுபடுத்தி காட்டும் பெண்கள் அணியும் தங்க ஆபரணத்
தொழிலில் இருக்கும் குழந்தைகள், எழுத வாசிக்க தெரியாத இயந்திர பேச்சு
மொழியுள்ள நடைப்பிணங்களாகும். 20000 ஆயிரம் தொழிலாளரைக் கொண்ட இந்த பணக்கார
செட்டியார் தெருவில், 40 சதவீதம் உழைப்பு பச்சிளம் பாலகர்களின் கைகளை
ஆதாரமாக கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 11, 12 மணி வரை உழைக்க வேண்டிய
இவர்கள், இலங்கை ஜனநாயகத்தினதும் கல்வி பற்றிய வெற்று அரட்டைக்கும் ஒரு
மாதிரியாகும்.
எத்தனை சதவிகிதம் பேர் கவ்வியைப பெறுகின்றனர், எத்தனை சதவீதம் பேர் கல்வியை பெற முடியாதவர்கள் உள்ளனர்.
1971 1971 1981 1981
கல்வி மட்டம் ஆண் பெண் ஆண் பெண்
பாடசாலை செல்லாதோர் 12.1 12.4 6.0 4.2
1 முதல் 5 வரை சித்தியடைந்தோர் 15.6 10.4 9.4 4.9
6 முதல் 10 வரை சித்தியடைந்தோர். 61.4 58.0 72.7 67.6
க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர். 9.9 18.0 9.8 19.6
க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர். 0.7 1.0 1.7 3.3
பட்டப்படிப்பும் அதற்கு மேலும் 0.3 0.6 0.1 0.4
கல்வி மட்டம் ஆண் பெண் ஆண் பெண்
பாடசாலை செல்லாதோர் 12.1 12.4 6.0 4.2
1 முதல் 5 வரை சித்தியடைந்தோர் 15.6 10.4 9.4 4.9
6 முதல் 10 வரை சித்தியடைந்தோர். 61.4 58.0 72.7 67.6
க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர். 9.9 18.0 9.8 19.6
க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர். 0.7 1.0 1.7 3.3
பட்டப்படிப்பும் அதற்கு மேலும் 0.3 0.6 0.1 0.4
கல்வி தரத்த்தில் வீழ்ச்சியுடன், தொடர்ச்சியாக கல்வி முடக்கப்படுகின்றது.
க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான
பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப்
பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12
சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில்
இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது.
மறுபக்கம் கல்வியை ஆளும் வர்க்கங்கள் மோசடியாக்கினர். 1985 களின் கல்வி
தரத்தை வீழ்ச்சியுற வைத்து சித்தியை அடைய வைத்தனர். இதன் மூலம் அரசு வேலை
வாய்ப்பு சார்ந்து நெருக்கடிகளை ஒரு சில ஆண்டு பின்தள்ளி வைத்தனர்.
1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் எமது
கல்வியின் அவலத்தைக் நாம் காணமுடியம். 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10
குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு
குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு
குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10
குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான
புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான
புள்ளிகளையே பெற்றனர். கல்வி கற்க்கும் மாணவனின் கல்வி தரம் மிகவும் ஒரு
கீழான நிலையில் காணப்படுகின்றது. இதை உன்னதமான கல்வி என்று சொல்ல எமது
நாட்டில் பலர் இருக்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் எமது மலட்டுக்
கல்வியின் அவலம் பரீட்சையின் பெறுபெறுகள் மூலம் பிரதிபலிக்கின்றது.
பரீட்சைக்காக கற்கும் கல்வியிலேயே இந்த அவலம் என்றால், கல்வியின் வீழ்ச்சி
பிரமாண்டமானது. எமது சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி,
வகுப்பறைகளின் திணிக்கப்படும் பொது குழந்தை திணறுகின்றது. இந்த திணிப்பு
அதிகாரம், அடக்குமுறை, பணிவு என்ற வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
குழந்தையின் இயல்பான உற்சகமாக அறிவதில் உள்ள ஆர்வத்துக்கு புறம்பாக,
மூளையில் புகுத்த முயற்சிக்கப்படும் போது அவலம் தவிர்க்க முடியாது. ஆனால்
இதை ப+சிமொழுகி கவர்ச்சி காட்டுவதில் நாம் எம்மையே ஏமாற்றுவதை தவிர,
எதுவும் இருப்பதில்லை. பொதுவாகவும் பெரும்பாலும் இந்தக் கல்வி பாடமாக்கும்
முறையில் மனப்பாடம் செய்யபடும் கல்வியாகிவிடுகின்றது. கல்வியின் சரியானதும்
உண்மையனதுமான சிறப்பு இயல்பாகவும், ஆர்வாமாகவும் சமூக வாழ்வுடன் கூடிய
உணர்வுபூர்வமாக உள்வாங்குவது தான்;. ஆனால் இது எமது கல்விக் கொள்கையில் ஒரு
அடிப்படை விடையம் என்பதை, எற்றுக் கொள்வதே இல்லை.
உயர் வாகுப்பை நோக்கிச் செல்லும் போதும் இதுவே நிகழ்கின்றது. 1990 தொடங்கிய
தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள்
(1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. அதாவது
முழுமையாக அனைத்த பாடத்திலும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம்
மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள்
மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல்
12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி
பெறவில்லை. 1987 இல் 389,577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில்
சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில்
வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112,577 மாணவர்கள் க.பொ.த உயர்தர
பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக
அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர்.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170,000 மாணவர்களில் 8 முதல் 9
ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். இலங்கையின் சமூகப் பொருளாதார
பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர்
சமூகமே பாதிக்கப்படுகின்றது.
க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தர வகுப்பில் மாணவர்கள் அடையும் பாதிப்பு
கடுமையானதும், உளவியல் ரீதியனதுமாகும். க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றும்
மாணவர் சமுதாயத்தில் இருந்து வடிகட்டப்பட்டு அண்ணளவாக 1.2 சதவீதமான
மாணவர்களே பல்கலைக் கழக அனுமதியைப் பெறுகின்றனர். அதாவது 100 மாணவன் உயா
வகுப்புக்குச் செல்லும் போது, 1 அல்லது 2 மாணவன் இந்த சமுதாயத்தின் உயர்
கல்வியை பெறும் கல்வி முறையை தான் நாம் பாதுகாத்து வைத்துள்ளோம். ஒரு
பாடசாலையில் 1500 மாணவர்கள் படிக்கும் போது அண்ணளவாக 18 மாணவன் தான்
பல்கலைக் கழகத்தை நோக்கிச் செல்லும் எல்லையில் தான், பாடசாலைகளின் ஒட்டு
மொத்த நலனும் சங்கமிக்கின்றது. அதாவது ஒரு மாணவனின் கல்வி ஆயுள் 10 வருடம்
எனின் 180 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கால் எடுத்து வைக்கின்றனர். ஆனால்
மிகுதி 1320 பேர் அந்த பாடாசாலைக்கு வெளியில் மலட்டுக் கல்விக்கு எந்த
சம்பந்தமில்லாத வாழ்வில், புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் அவலத்தில்
காலடி எடுத்து வைக்கின்றனர். இவர்களைப் பற்றி இந்த பாடசாலைகள்
சிந்திப்பதற்கு கூட தயார் அற்ற பொதுவான சமூக கண்ணோட்டத்தை
பிரதிபலிக்கின்றனர். அந்த நிலையில் இக்கட்டுரை இந்த அடிப்படை விடையத்தில்
சிந்திக்க துண்டுவது அடிப்படை நோக்கமாகும். பல்கலைக்கழகம் செல்வோரும் கூட
பின்னால் தமது வாழ்வுக்கு தொடர்பற்ற வகையில் மிளவும் சிதைக்கப்படுகின்றனர்
என்பது மற்றொரு உண்மையும் கூட.
பல்கலைக்கழக கல்வியை நோக்கிய எமது கனவுக் கல்வி
எமது மலட்டுக் கல்வியில் தகுதி பெறும் ஒருவருக்கும் கூட கல்வி முழுமையாக
கிடைப்பதில்லை. இது மிகக் குறைந்த எண்ணிக்கையனவர்களை தேர்ந்து எடுப்பதன்
மூலம் அதாவது அதி திறமைசாலி என்ற வரையறை கையாளப்படுகின்றது. இது பிரதேச
வேறுபாடு, இனப் பாகுபாடு, மதப்பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை, வறுமை என்று
வௌ;வேறு சமூக் பொருளாதார காரணங்களுக்கும் உள்ளாகி, மறைமுகமாகவும்
நேரடியாகவும் கல்வி மறுப்புக்கு உள்ளாகின்றது. இதன் விளைவு நேரடியானது.
1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள்
தனியார் அல்லது உயாதர பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 18
சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். இவர்களும் கூட உயாந்தர
பாடசாலைகளின்; பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயும்
போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவனோர்
39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி
மறுக்கப்படுவதைக் இத நிறுவியுள்ளது. 17.6 சதவீதமான மேட்டுக் குடியில்
இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வது, இந்த சமூக அமைப்பின்
ஜனநாயக விரோதப் போக்கையும் உழைக்கும் மக்களின் கல்வி மறுப்புக்கு
உள்ளாவதையும் நிறுவுகின்றது. இந்த மலட்டுக் கல்வி உயர்குடிகளின் பிடியில்
இருப்பதையும், இதற்குள் தான் தேசிய இனப் போராட்டங்கள் நிகழ்வதையும்
காட்டுகின்றது இப்படி உயர் கல்வி மறப்புக்குள்ளவோர் தொகை கணிசமானது.
பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தொடர்ந்து உயர் கல்வி கற்பதை உறுதி செய்ய
இந்த கல்வி மறுப்பதைக் கூட, இந்த சமூக அமைப்பு கண்டு கொள்வதில்லை. இதை
நோக்கி எமது சிந்தனை துண்டுடப்படுவது அவசியமானது.
இதை மேலும் நாம்புரிந்து கொள்ள சில அடிப்படையான தரவுகளை ஆராய்வோம். 1942
இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை
904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000
மாக உயர்ந்தது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர்
விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70
000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தோர் 1960 இல் 1812
பேரும், 1969-70 இல் 3451 பேரும், 1995 இல் 8000 பேருமாகும். அதாவது
பல்கலைக்கழக செல்லும் பரீட்ச்சையில் சித்திய அடைந்தவர்களில் அண்ணளவாக,
இன்று 10 சதவீதம் பேருக்கே தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடாந்த கல்வி கற்க அனுமதிப்பது படிப்படியாக குறைந்து வருகின்றது. இதை
பற்றிய பிரச்சனைக்கு குறைந்த பட்சம் இந்த கல்வி முறைக்குள் கூட தீர்வு
காணப்பட வேண்டம். ஆனால் நாம் இதைப்பற்றி சிறிதும் கூட அக்கறை
காட்டுவதில்லை. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை
ஆழமாகவும் வெகமாகவும் குறைந்து வந்துள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி
உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26
சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6
சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து வந்துள்ளது.
பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்;பட்டு, கற்ற
கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில்
சமுகத்தில் வீசப்படுகின்றார்கள். கல்வி அமைப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள்,
சமுகம் பற்றி அக்கறை கொள்ளாத வரை இந்தக் கல்வி சார்ந்த மலட்டுத் தனம்,
ஒட்டு மொத்த சமூகத்தையும் ஆழமான படுகுழிக்குள் தள்ளிச் செல்வது ஒரு விதியாக
நீடிக்கின்றது. கல்வி கிடைத்தவர்கள் அவலம் மறுபுறத்தில் பெருகி
வருகின்றது. 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது
மலட்டுக் கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை
வேலையற்றவராக்கி விடுகின்றது. மலட்டுக் கல்வியின் இறுதி முடிவு இவ்வளவு
அசிங்கமாகி அவலமாகிவிடுகின்றது.
மலட்டுக் கல்வியின் வரலாறு
நவீன இந்த மலட்டுக் கல்வியின் வரலாறு, காலனித்துவ ஆட்சியின் Nதிவயில்
இருந்து தொடங்கியது. ஆங்கிலேய காலனித்துவ நலன்களை பேனக் கூடிய, அதை
பாதுகாக்க கூடிய ஒரு மலட்டுக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன் மூலம்
ஆங்கிலேய காலனித்துவ உள்ளுர் ஆட்சியாளர்களை உருவாக்கும் கல்வியாக இது
பரிணமித்தது. பொதுவாக இக் கல்வி ஆங்கில மொழிக் கல்வியாக இருந்தது. இதை
அப்பட்டமாக சொன்னால் ஆங்கிலேய காலனித்துவாதிகளின் கைக் கூலிகளை உருவாக்க
உருவானதே, எமது கல்வியாகும். மறுபுறத்தில் இது தேச நலனுக்கு விரோதமான
மலட்டுக் கல்வியாக இன்று வரை நீடிக்கின்றது. இது ஆரம்பம் முதலே ஆங்கில
கல்வியை அடிப்படையாக கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1911ம் ஆண்டில்
இலங்கையில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும், கரையோரச்
சிங்களவர்கள் 3.5 சதவீதமாகவும், கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும்
காணப்பட்டனர். இப்படி உருவான இந்த கல்விமுறை என்றுமே மற்றப்படவில்லை.
காலனித்துவம்; மற்றொரு வகையில், அடிமைத்தனத்தை கிறிஸ்தவ மதம் ஊடாக
புகுத்தியது. இது கடந்த கால காலனிய வராலாறு. இந்த வகையில் இலங்கையில்
கல்விக் கொள்கையில் கிறிஸ்தவ மதம் நேரடியாக ஈடுபட்டதுடன், கல்வியில்
மதத்தையும்; புகுத்தியது. 1939 இல் பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டில்
கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு 75.2 சதவீதமாகவும், பௌத்த பாடசாலைக்கு 19.3
சதவீதமாக இருந்தது. இங்கு தமிழ் பாடசாலைகள் பல கிறிஸ்துவ பாடசாலையாகவே
இருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி "ஏ", "பி" பாடசாலைகளாக உள்ள 40 உயர்
பாடசாலைகளின் வரலாற்றை ஆராய்ந்தால் இது தெட்டத் தெளிவாக வெளிப்படுகின்றது.
1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும்,
500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000
முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது.
இப்படித்தான் கல்வி மதம், இனம், காலனித்துவ நலன்கள் சாhந்து காணப்பட்டது.
கிறிஸ்தவ கல்விமுறைக்கு எதிராக ஆறுமுக நாவலர் போன்றோh சைவ மதக் கல்வியை
கொண்டு வந்தனர். இங்கு உயர்சாதிய இந்துக் கல்வியும், தமிழ் மொழிக்
கல்வியும் போட்டியாக உருவாக்கபட்டது. இங்கு கல்வி மதம் சார்ந்த
முரண்பாட்டின் மேல் இருந்ததே ஒழிய, காலனித்துவ கல்வி முறைக்கு எதிராக
இருக்கவில்லை. இதனால் இலங்கையின் அனைத்து கல்வி முறையும் காலனித்துவ கல்வி
முறையாக இருந்தது, இருந்த வருகின்றது. இதில் மாற்றம் நிகழவில்லை.
கல்வி கற்பிக்கும் முறையில் சுதந்திரத்தின் பின் இரு மாற்றங்கள் பிரதானமாக செய்யப்பட்டன.
1.தாய் மொழி ஊடான கல்வி.
2.சொந்த சமயக் கல்வி
இவை இரண்டும் காலனித்துவ கல்வியுடன் புதிதாக இணைக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. இதுவும் கூட இலங்கையின் இனவாத அமைப்பின் தேவையுடன் குறுகிய நோக்கில் புகுத்தப்பட்டது. இனவாதம் அமைப்பாகவும், மதவாத அமைப்பாகவும் இலங்கை சமூக அமைப்பை பிளக்கபட்டது. இது இன்று வரை ஒரு பொதுவான தளத்தில் நீடிப்பதுடன், காலனித்துவக் கல்வியே தொடருகின்றது. நேரடி காலனிகள் அகன்ற போது, நவகாலனியம் மற்றீடானது. இதற்கு கானித்துவ கல்வி முறை அவசியமாகின்றது. இங்கு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. இதன் விளைவுகள் முடிவாக இந்த மலட்டுக் கல்வியில் உருவாகும் "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" என்ற இலட்சியத்துடன் முடிகின்றது. எமது மக்களுக்கு இது சேவை வெய்வதில்லை. லண்டன் கனவுடன் தொடங்கும் இந்த காலனித்துவ நனவுகள், அவர்களை அங்கேயே தஞ்சமடைய வைக்கின்றது. யாழ் பிரதேசத்தை எடுத்தால் மிகப் பெருமளவில் உருவான "எஞ்சினியர்கள், டாக்டர்கள்"" அந்த மண்ணுக்கு சேவை செய்யவில்லை. சிங்கள இனவாதிகளின் இன அழிப்பு யுத்தம் கோரமாகிய நிலையில், மருத்துவ உதவியற்ற எம் மண்ணின் அவலம் இதைத் துல்லியமாக நிர்வாணமாக்கின்றது. மாறக வெளிநாட்டு வைத்தியர்கள், சிங்கள வைத்தியர்கள் முன் மக்கள் புரியாத மொழியில் மண்டியிட்டு வாழ்வதற்கே, எமது மலட்டுக் கல்விக் கொள்கை எதார்த்தமாக்கியுள்ளது. இந்த அவலம் தற்செயலானவை அல்ல. மாறாக எமது மலட்டுக் கல்வியும், அதன் காலனித்துவ நலனும், மனிதனின் சமூகப்பற்றை இல்லாது அழித்து ஒழிக்கின்றது. பணம் பணணும்; சுயநலன் சார்ந்த லட்சியம், காலனித்துவ கல்வியின் அடிப்படையாகும்;. காலனித்தவ கல்வி தனக்கு சேவை செய்ய கொருவதன் மூலம், இந்த வக்கிரமாக நியாப்படுத்தப்படுகின்றது.
இனவாதக் கல்வியும் அதன் வெட்டு முகமும்.
1969 இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள்
எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது. இதை மாவட்ட ரீதியாக
பங்கிடப்பட்டது. 1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட
அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும்,
1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான
திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின்
பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக இனவாத அமைப்பு வளர்ச்சி
பெற்றது.
மலட்டுக் கல்வியும், காலனித்துவ கல்வியும் உண்மையில் மக்கள் நலனில் இருந்து
பிரிந்து கிடக்கின்றது. இதனால் தேசத்துக்குரிய கல்வி முறை
உருவாக்கப்படவேயில்லை. தேச உற்பத்திகள், வருமானங்கள் இந்த கல்வியுடன்
பின்னிப்பினையவில்லை. தேசிய பொருளாதார கட்டுமானங்கள் இந்த கல்வி முறைக்கு
வெளியில் கதியற்று கிடக்கின்றது. இதனால் சமுதாயத்தில் எற்பட்ட சமூக
நெருக்கடிகளை, இந்த கல்வி முறை உற்பத்தி செய்தது. வாழ்வு உழைப்பும் ஒன்றாக
இருக்க, கல்வி வேறு ஒன்றாக எதிர்திசையில் நீச்சலிட்டது. இதை சமளிக்க
இனவாதத்தை கையில் எடுத்த ஆளும் வர்க்கங்கள், அதை கல்வியில் புகுத்தியது.
இதன் மூலம் சமூக நெருக்கடிகளை இன நெருக்கடியாக்கியது. கிடைக்கும் சில உயா
கௌவுரமான பட்டங்களை, இனத்துக்கிடையில் பகிரும் போட்டியாக்கியதன் மூலம்,
கல்வியை வக்கிரப்படுத்தி சமூக நெருக்கடியை இனநெருக்கடியாக்கினர். அதாவது
கிடைக்கும் ஒரு சில எழும்புகள் யாருக்கு என்ற நிலைக்குள் கல்வி
பந்தாடப்பட்டதன் மூலம், கல்வியை இனவாதமாக்கி முற்றாக அனைத்து
சமூகத்துக்கும் மறுப்பது சாத்தியமாகியது. இதில் இன ஒடுக்கமுறை சார்ந்து,
சிறுபான்மை இனங்கள் பாரிய மாறுப்புக்குள்ளாகின்றனர்.. இதுவே இந்த அமைப்பின்
ஜனநாயகமாகியது.
இனவாதக் கல்வி முறை இனத்தை மலடாக்குவதில் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது.
இனவாத அமைப்பில் தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள
ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள
மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற
விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை
காணப்படுகின்றது. கல்வியில் குறிப்பாக இனவாதம் புகுத்தப்பட்ட 1971க்கும்
1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம்
வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும்,
முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிகளின் குறிப்பான
நியாமனம் முஸ்லிம் மந்திரி என்பதால் மட்டும் விதிவிலக்காகியது. ஆசிரியர்
மாணவர் விகிதம் மேலும் குறிபாகும் போது, பின்தங்கிய பிரதேச சாதிய இன
மாணவர்கள்; அதிகம் பதிப்புக்கு உள்ளாகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 184350 யாகும.
இங்கு 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர்
விகிதத்தில் காணப்படுகின்றது. இதில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட
பின்தங்கிய பகுதியான கிளிநொச்சி முதல் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் அதிகம்
பாதிப்படைகின்றது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான
பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும்,
யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு
யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக
காணப்படுகின்றது. இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது
ஆழமான கல்விப் பிளவை ஏற்படுத்துகின்றது. இது சாதி, மதம், இனம், பிரதேசம்
என்று எங்கும் இது விரைவிப் போய்யுள்ளது. ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைக்
காணமுடியும்; 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர்
72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச்
சேர்ந்தோரும் 2.3 சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகினர். இங்கும்
யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு
தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாகும். 1979-81 இலங்கையில்
முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும்;. கல்வியின்
மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர்.
1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180000 பேர் பங்கு கொண்ட
போது, மலையக மாணவர்கள்; 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர். க.பொ.த
சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்த போது, மலையக
மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ்
தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள், அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள்
உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை. 12 பல்கலைக்
கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை
200 க்கும் குறைவாகவே உள்ளனர். இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக
மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம்
கிடைக்க வேண்டும்;. ஆனால் யாரும் இதை கண்டு கொள்வதில்லை.
யாழ்ப்பாணத்தில் 1998-1999 இல் 20 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை.
5 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட 132 859 பேரில் 17.1 சதவீதமான மாணவர்கள்
அதாவது 23000 பேர் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை. 1.9 சதவீதமான 2500
குழந்தைகள் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. 13.3 சதவீதமான 17700 மாணவர்கள்
இடம் பெயர்ந்து காணப்படுகின்றனர். 46.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் 2000
ரூபாவுக்கு குறைவான குடும்பங்களைச் சார்ந்த வறியவர்கள். 6.9 சதவீதமான
சிறுவர் சிறுமிகள் அதாவது 9200 பேர் அன்றாட கஞ்சிக்கே உழைப்பில்
ஈடுபடுகின்றனர். 10.2 சதவீதமான 13500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
0.09 சதவீதம்; அதாவது 1200 குழந்தைகள் ஊனமுற்றவர்களாகும். 5.2 வீதமான 6908
இளம் வயதினர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர். இந்த சமூக அவலம்
சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் என்ற பல்துறை சார்ந்து
புரையோடிக் காணப்படுகின்றது. இது கால காலமாக நீடித்து இருக்கின்றது. இன்று
இனவாத யுத்தம் இதை அகலப்படுத்தியுள்ளது. ஒருபுறம் மலட்டுக் கல்வி, மறுபுறம்
சமூக அவலங்கள் இளம் குழந்தைகளின் வாழ்வில் நாசகாரமான நஞ்சாக
திணிக்கப்படுகின்றது.
மாணவர்களின் குற்றங்கள் பற்றியும் தண்டனை பற்றியும் வரையறையின் அளவு என்ன?
மாணவர்களை தண்டிப்பது சரியானது சரியானது அல்லது பிழையானது என்ற வரையறையில்
இருந்தே, தண்டனை முறை உருவாகின்றது. ஆனால் இது எல்லா சமூகத்திலும் பொதுவாக
இருப்பதில்லை. சமூக பொருளாதார வடிவங்களுக்கு இணங்க குற்றங்கள்
வகைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது நிகழ்கின்றது. இது சில வேளைகளில் ஒரு
இடத்தில் குற்றமாகவும் மறு பிரதேசத்தில் குற்றமற்றதாகவும் கூட
இருக்கின்றது. இங்கு குற்றமாக இருப்பது எல்லாம் குற்றமாக இருப்பதில்லை.
குற்றம் எல்லாம் தனிபட்ட ஒருவனின் தனி இயல்புமல்ல. குற்றங்கள் சமூக
கொருளாதார கூறுகளே வித்திடுகின்றன. இதை தண்டிக்கும் போது, தனிப்பட்ட மனிதனை
தண்டிப்பது மேற்கு மற்றும் எமது நாடுகளில் பொதுவாக காணப்படுகின்றது.
குற்றத்துக்கான சமூக பொருளாதார வேர்கள் எப்போதும் ஆராயப்படுவதில்லை.
குற்றங்கள் தண்டிக்கப்படுவது நியாப்படுத்தப்படுவது பொதுவான சமூக
இயல்பாகிவிடுகின்றது. இதனால் குற்றங்களும், தண்டிப்பதும் இந்த சமூக
பொருளாதார அமைப்பு நீடிக்கும் வரை நீடிக்கவே செய்யும். இதை தடுத்து
நிறுத்தும் சமூகப்பலம், இந்த பொருளாதார அமைப்புக்கு கிடையாது. குற்றத்தின்
காரணம் என்ன? இந்த சமூக பொருளாதார அமைப்புக்கும் இந்த குற்றத்துக்கும் உள்ள
உறவு என்ன? இதை எப்படி மாற்றி அமைப்பது என்ற விடையத்தைக் கவணத்தில் கொண்ட,
இந்த அமைப்பை மாற்றாத வரை குற்றங்களும் தண்டிப்புகளும் நீடிக்கும்.
விரும்பினால் யார் தண்டிப்பது, எப்படி தண்டிப்பது என்று மாற்றிமாற்றி
தண்டிப்பதையும், அதை தொடர்வதையும் நியாப்படுத்தவே முடியும். இதனால் குற்ற
அற்றதை குற்றமாக்கியும், குற்றங்களை குற்றமற்றதாக்கும்; எல்லா வடிவங்களும்
ஆசிரியா மாணவர் உறவில் மட்டமல்ல, சமூகத்திலேயே நீடிக்கும். இறைய
குற்றங்களின் வரையறை சமூக அமைப்பின் நலன்களில் இருந்து
தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக தனிமனித நலன்களில் இருந்து
தீர்மானிக்ப்படுகின்றது. குற்றங்களும் இதில் இருந்தே உருவாகின்றது.
மலட்டுக் கல்வியில் ஆசிரியர் மாணவர் உறவு
அண்மைக் காலத்தில் அநேகமாக எப்போதும் சர்ச்சைக்குள்ளாகின்ற ஒரு விடையமாக
உள்ளது. இங்கு மாணவர்களை ஆசிரியருக்கு எதிராக அல்லது ஆசிரியர்களை
மாணவருக்கு எதிராக நிறுத்தி வைத்தே விவாதிக்கப்படுகின்றது,
குற்றச்சாட்டப்படுகின்றது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது, இந்த சமூக
அமைப்பால் நிர்ணயமாகின்றது என்ற உண்மையை நாம் காண மறுக்கின்றோம்;. இந்த
சமூக அமைப்பில் எற்படும் வெடிப்புகளுக்கு எற்ப குற்றச் சாட்டுகளை
எதிர்தரப்பு மீது வீசி எறிந்து விடுவதன் மூலம், நல்ல தீர்வை காணமுடியும்
என்ற வகையில் பலர் கருத்துரைக்கின்றனர்.
முதலிலே இந்த கல்வி என்பது எமது சமூக பொருளாதார உறவு முறைக்கு வெளியில்
கற்று தரப்படுகின்றது. அதாவது காலனித்துவக் கல்வி நவகாலனித்துவ கல்வியாக
தொடருகின்றது அதிலும் கல்வியை கற்று உயர் வகுப்பை எட்டிப்பிடித்த பின் 1000
க்கு 2 அல்லது 3 பேரை உருவாக்கும் "எஞ்சினியர் டாக்கடர்" என்ற கனவுக்குள்
மொத்த கல்வியும் மலடாக்கப்படுகின்றது. இதனால் கல்விமுறையில் ஆசிரியர்
மாணவர் இடையில் பிடிப்பான பங்காற்றல் அருகிவிடுகின்றது. சமூக நலனை விட
தனிப்பட்ட நலன் சார்ந்த கல்விமுறை, ஆசிரியர் மாணவர் உறவிலும் சுயநலனே
பொதுவாகிவிடுகின்றது. பாரிட்சையில் சித்தி செய்ய வைக்கும் மனப்பாடக்
கல்விமுறை, உழைத்து வாழும் வாழ்வின் அடிப்படையில் இருந்து விலகி
நிற்கின்றது. வாழ்வோடு விலகியோடும் கல்வி முறையில் கற்போரும் கற்பிப்போரும்
பிடிப்பற்ற மந்தைக் குணத்தில் கற்பிப்பதும் கற்பதும் எமது கல்வி முறையில்
இயல்பாகும்.
எமது சமூக பொரளாதார அமைப்பு ஜனநாயகத்தை குறைந்த பட்சம் அங்கிகரிப்பதில்லை.
மறாக அடிமைத்தனமம், அடிமைத்தனத்தை நியாப்படுத்துவதும் எமது சமுக அமைப்பின்
அச்சாக உள்ளது. உயர் சாதிக்கு தாழ்ந்த சாதிகள் அடிமை. ஆணுக்கு பெண் அடிமை.
பெற்றொருக்கு குழந்தை அடிமை, ஆசிரியருக்கு மாணவர்கள் அடிமை, பல்கலைகழத்தில்
பழைய மாணவருக்கு புதிய மாணவாகள் அடிமை என்று எங்கும் எதிலும் அடிதைத்தனம்
எமது சமூக அமைப்பின் அச்சாக உள்ளது. அதாவது அடிமை வடிவம் எங்கும் எதிலும்
விரவிக்கிடக்கின்றது. அடிமைத்தனத்தை நியாப்படுத்தும் எமது சமூக அமைப்பின்
இருப்பு, வன்முறை மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மாணவர் உறவில் இவை எல்லாம் எழுதப்படாத விதிகள்.;; இது
அப்படித்தான் உள்ளது. இதை மீறுவது ஒரு சமூக குற்றமாக, ஒழுக்க மீறலாக
உள்ளது. இது வெறுமானே ஆசிரியர்கள் உருவாக்கியது அல்ல. தனிப்பட்ட ஆசிரியனின்
மனநிலை சார்ந்ததும் அல்ல. சமூக அமைப்பின் கட்டமைப்பில்; தான், இவை
அனைத்தும் நீடிக்கின்றது. தனிப்பட்ட ஆசிரியர்களின் சமூகம் பற்றிய
கண்ணோட்டம் சார்ந்து, தனிப்பட்ட உணர்வுகள் இதன் மேல் சில நெகிழ்சியை அல்லது
கொடூரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு வெளியில் ஆசிரியருக்கு
மாணவர்கள் அடிமையாக இருத்தல் என்பது, எமது சமூக பொருளாதார அமைப்பில்
அனைத்துப் பகுதியிலும் வேரோடிப் போய்யுள்ளது. ஜனநாயகம் கூட எமது சமூக
அமைப்பில் ஒரு குற்றத்துக்குரிய தண்டனைக்குரியதே. இதனால் சமூக உறவுகளில்
எற்படும் அடிமை தனத்துக்கு எதிராக, மேற்கத்தை முறையை மாற்றக பொதுவாக
வைக்கப்படுகின்றது.
உண்மையில் வௌவேறு பொருளாதார கட்டமைப்பால் உருவாகும் சமூக அமைப்பின், இரண்டு
பக்கத்தையும் சுய ஆய்வுக்கு உள்ளாக்க மறுக்கும் போக்கின் மற்றொரு
வெளிப்பாடுதான் இது. கல்வியில் ஆசிரியர் மாணவரை அடித்தல் என்ற விடையம்,
அண்மைக் காலங்களில் அடிக்கடி சாச்சைக்குள்ளாகின்றது. இதுபோல் மாணவர்களின்
வன்முறையும் கூட சாச்சைக்குள்ளாகின்றது. ஏன் எதற்காக வன்முறையில்
ஈடுபடுகிறார்கள்? எதற்காக அடிக்கின்றார்கள்? இந்த கேள்விகான பதிலில்,
எப்போதும் இதற்கு அடிப்படையாக சமூகப் பிரச்சனை இருப்பதை மறுதலிக்கின்றது.
சமூக அமைப்பே ஜனநாயகமற்ற வன்முறை கொண்ட சமூகமாக உள்ளவரை, இந்த பிரச்சனை
அங்கிருந்து தான் உருவாகின்றது.
ஒரு மாணவன் கற்பதில் சரி, அவன் தவறு இழைக்கும் போதும் சரி, அதை அவனுக்கு
புரிய வைக்கவும் அதன் மூலம் எற்க வைத்து நடைமுறைப்படுத்துவது தான், எங்கும்
எப்போதும் சரியானவை. ஒரு மாணவன் தொடங்கி சமூகம் வரை இது பொதுவாக கையாளப்பட
வேண்டும். மனித உயிர் எப்போதும் சிந்திக்க திறனுள்ளதாக இருப்தால், புரிய
வைப்பது இலகுவானது. தவறு அல்லது குற்றம் என்பது எப்போதும் தனிமனித நலன்
சார்ந்த சமூக அமைபின் பொது அடிப்படையில் நின்றே, குற்றம்
சாட்டப்படுகின்றது. இதன் மூலமே தண்டிக்கப்படுகின்றது. சமூக அமைபின் மொத்த
நலனில், உன்னதமான சமூக வாழ்வியல் சார்ந்து புரிய வைத்தல், கல்வி முறையில்
அவசியமானது, நிபந்தனையானது. இரண்டாவது சமூக அமைப்பின் குறைபாடுகளை
களையவும், உயர்ந்த சமூக அமைப்பை முன்னிறுத்திய புரிய வைத்தல் மூலம்,
சமூகத்தை ஜனநாயகப் படுத்தி எற்க வைத்தல் சாத்தியமானது. சமூக அமைப்பின்
மீதான ஆழமான புரிதல் எற்படும் போது, மிக உயர்ந்த சமூக பிரஜைகளை உருவாக்கி
விடுகின்றது. இதை வன்முறை சாதிக்க முடியாது.
வன்முறை சமூக வடிவமாக நிடிக்கும் போது, அடித்தல் இன்றும் எதார்தத்தில்
உள்ளது. புரிய வைக்கும் அனுகுமுறை உரிய அமைப்பாகவோ, ஆசிரியர்கள் கற்றுக்
கொள்ளக் கூடிய சமூக அமைப்பாக எமது அமைப்பு இல்லை. இங்கு அடித்தல் வன்முறை
சமூகம் நீடிக்கும் வரை, அதுவும் இருந்து கொண்டே இருக்கும். சிறை,
நீதிமன்றங்கள், பொலிஸ் என்ற நீளும் மனிதனுக்கு எதிரான அடக்குமுறைச் சட்ட
ஆட்சிகள் நீடித்த இருப்புக்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை, தண்டிப்பு
முறையும் நீடிக்கவே செய்யும்;. குற்றங்கள் இந்த சமூக பொருளாதார அமைப்பில்
உற்பத்தியாக்கின்றன. அதற்கான துண்டுதலை உருவாக்கும் சமூக பொருளதார கூறுகள்
இந்த அமைபிலேயே காணப்படுகின்றது. உதாரணமாக வன்முறை காட்சிகள் அல்லது
வக்கிரமான காட்சிகளை காணும் ஒருவன், அதுவாக இயங்குவதற்கான உந்தலை
கொடுக்கின்றது. இதில் தனிப்பட்ட மனிதன் வக்கிரமாகும் போது, குற்றம்
கடுமையாகிவிடுகின்றது. இங்கு இது அராஜாகமகி சமூகம் நிலைக்க முடியாத
நிலைக்கு அவலமாகிவிடுகின்றது.. இங்கு இதைக் கட்டுப்படுத்த தண்டனைமுறை
அவசியமாகிவிடுகின்றது. இதை யார் செய்வது என்பது முரண்படுவதில் அhத்தமில்லை.
இந்த தண்டனையை பெற்றோர், ஆசிரியர், பொலிஸ், நீதிமன்றம், சிறை என்று பல
படிகளில் நடக்கின்றது. இதை ஆசிரியர் அல்லது பெற்றோர் தண்டிக்க கூடாது
என்பது, அர்த்தமற்ற ஒரு விவாதப் பொருளாகும்;. முதலில் குற்றங்கள்
எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்ற மூலக் காரணத்தைக் கண்டு அறிவதன்
மூலம் தான், தண்டனையை ஒழிக்க முடியும்.
மேற்கத்திய கல்வி எமக்கு ஒரு மாற்றா!
மேற்கு நாடுகளில் பாடசாலைகளில் அடிப்பதில்லை. பெற்றோர் அடிக்கும் உர்pமை
அவர்களுக்கு இருப்பதில்லை. இது சட்டத்தால் அவர்களுக்கு தடை
செய்யப்பட்டுள்ளது. இதை சிலர் எமது நாட்டுக்கு மாற்றக வைக்கின்றனர்.
அனைவரும் ஒரு உண்மையை நிச்சயமாக புரிந்து கொள்ள மறுக்கும் போது, இப்படி
அங்கும் இங்குமாக எதிர் நிலையில் நிற்பது தொடங்குகின்றது. மேற்கில் மாணவன்
குற்றம் இழைக்கும் போது, ஆசிரியர் அதை பொலிசிடம் அல்லது பெற்றோரிடம் தண்டனை
கொடுக்க விட்டுவிடுகின்றனர். சிலவேளைகளில் விசேட பாடசாலைக்கு
அனுப்பிவிடுகின்றனர் அல்லது பாடசாலையை விட்டே வெளியேற்றி விடுகின்றனர்.
இங்கும் விதிவிலக்கின்றி தண்டனை முறை கையாளப்படுகின்றது. இங்கு தண்டனை
வழங்கும் இடம் தான் மாறுகின்றது. இங்கு பொலிஸ் வன்முறையற்ற ஒரு நிறுவனமோ
அல்லது சமூகத் தீர்வை வைக்கும் மனிதர்களோ அல்ல. இந்த அமைப்பை வன்முறை மூலம்
கட்டி பாதுகாக்கும் ஒரு அடக்குமுறை இயந்திரம் தான் பொலிஸ். உண்மையில்
அங்கும் இங்கும் தண்டனை வழங்கும் இடம் மட்டுதான் வேறுபடுகின்றது. ஆனால்
தண்டனை அங்கும் இங்கம் வழங்கப்படுகின்றது.
மேற்கில் உளவியல் தண்டனை முறை காணப்படுகின்றது. தனிமைப்படுத்தி சமூக
புறக்கணிப்பு ரீதியாலன இந்த தண்டனை முறை, உடலியல் வன்முறையை விட கெடுதலானது
கொடூரமானது. சமூக புறக்கணிப்பு ரீதியான தனிமைப்படுத்தி வைத்தல், சமூக
வெறுப்புக்கு அத்திவாரமாக அமைகின்றது. ஒரு கூட்டத்தில் இருந்து சில
நிமிடங்கள் முதல் பல மணி நேர தனிமைப்படுத்தும் முறை, தண்டனை பெற்றவனும்
எந்த சமூகத்தில் இருந்து புறகனிப்புக்கு உள்ளாகின்றனோ, இருவரிடமே இரண்டு
நேர் எதிரான போக்குகளுக்கு இது வித்திடுகின்றது. சமூக எதிர்ப்பும், தனிமனித
வாவும் இங்கு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது.
இன்று குற்றங்களின் தன்மையை எடுக்கும் போது, மேற்கில் கோராமாக உள்ளது. எமது
நாடுகளை விட இங்கு இளம் வயதினரின்; குற்றங்கள் வக்கிரப்பட்டு
பெருகிவருகின்றது. ஆனால் எமது நாட்டில் அப்படி அல்ல. மேற்கை பார்த்து அதன்
நலனுக்கு இசைவாக பொம்மை அரசுகளாக மறுவது போன்று, எமது நாடுகளிலும்
குழந்தைகளின் வன்முறை மேற்கை நோக்கி வடிவில் முன்னேறுகின்றது. இன்ற
குற்றங்களின் அளவு மேற்கில் அதிகமாக உள்ளது. அதன் பண்பு வகைப்பட்ட
வடிவிலும் கோரமாக உள்ளது. எமது நாட்டில் பாடசாலை கட்டிடத்தில் ஒரு மாணவன்
செல்லும் போது ஆசிரியரின் கண்கணிப்பு எதுவும் இருப்பதில்லை. எந்தப்
பொருளும் களவு போவதில்லை. எந்த மேசையும் அடித்து நொருக்கப்படுவதில்லை. ஒரு
சில விதிவிலக்கு தவிர, பாடசாலை பற்றிய சமூக உணர்வு மாணவரிடையே மேல் நோக்கி
நிற்கின்றது. ஆனால் இங்கு மாணவர்கள் ஆசிரியர் கண்கணிப்பு இன்றி
கட்டிடத்தினுள் அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதிப்பின் அங்கு எதுவும்
மிஞ்சியிருப்பதில்லை. இது பொதுவான இரண்டு சமூக பொருளாதார அமைப்பின் வெட்டு
முகம்.
எமது அமைப்பில் இன்னமும் நீடிக்கும் சமூக கண்ணோட்டமும், மேற்கில் தனிமனித
கண்ணோட்டமும் இதற்கான வேறுபட்ட விளைவுகளை உருவாக்கின்றது. இதனால் குற்றஙகள்
தன்மை மாறுபடுகின்றது. எமது அமைப்பில் சமூக உணர்வு; குற்றத்தை
குறைக்கின்றது. இங்கு சமூக உறவாக்கத்துக்கு எதிரான தனிமனித வாதம்,
குற்றத்தை அதிகரிக்கவும் அதே நேரம் வக்கிரப்படுத்தவும் செய்கின்றது.
மறுபக்கத்தில் மேற்கத்திய அமைப்பில் உள்ள சில ஜனநாயக பண்புகள், இந்த கல்வி
கற்பிக்கும் முறையில் உயிரோட்டமான பண்புளைக் கொண்ட போதும், இங்கும் கல்வி
கற்பித்தல் இயந்திரமாக மாணவர்களுக்கு திணிக்கப்படுகின்றது. அதாவது இங்குள்ள
கல்வி முறை, மேற்கத்திய உற்பத்தி முறையுடன் இணங்கி இயங்கம் வகையில் ஒரு
இயந்திரத்தின் உறுப்பாக மட்டும் இருக்க கற்பிக்கப்படுகின்றது. அந்த இயந்திர
பகத்தில் மட்டும் இயங்கும் ஒரு கருவியாக இங்கு மாணவர்கள்
உற்பத்தியாகின்றனர். இதனால் உழைப்பின் மீதான சமூகப் பொது அறிவு என்பது
சூனியமாக உள்ளது. இது எமது நாட்டில் எதிரிடையாக கல்விக்கு வெளியிலான
நடைமுறை வாழ்வில் பெறமுடிகின்றது. உண்மையில் வேறுபட்ட பொருளாதார வாழ்வு
முறையே, இதை நிர்ணயம் செய்கின்றது.
டியூட்டரிக் கல்வி ஒரு வர்த்தகமே
எமது கல்வி முறையில் டியூட்டறிக் கல்வி கடந்த 20 வருடத்தில் ஒரு
புற்றுநோயாகி, அதுவே கல்வி மறுப்பு கொள்கையாகின்றது. இந்தக் கல்விமுறை
சுயநலக் கொள்கையை தேசிய மயமாக்கியுள்ளது. இதுவும் தனிப்பட்ட ஆசிரியரின்
விருப்பு வெறுப்பு சார்ந்த ஒன்றல்ல. இங்கும் சமூக அடிப்படைதான் இதை
வித்திடுகின்றது. முன்பை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எஞ்சினியர்,
டாக்கடர் இடங்களை பிடிக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். இதனால் மனப்பாட
கல்விமுறை மிகவும் கூர்மை அடைகின்றது. மனப்பாட மூலமான மாணவ கம்யூட்டர்களை
உருவாக்கும் சுயநலம், தனிப்பட்ட ஆசிரியர்கள் மூலமான கல்வி போதித்தல்
வெற்றியின் லட்சியமாகின்றது. இதனுடன் எவ்வளவுக்கு மாணவன் புத்தகத்துடன்
போராடு;கின்றனோ, அந்தளவுக்கு பரீட்சையில் வெல்ல முடியும் என்ற கொள்கை
டியூட்டரிக் கல்வியின் வளர்ச்சிக்கு மேலும் அத்திவாரமாகும்.
தனியார் வைத்தியசாலை தனக்கான தனிபட்ட நோயாளியை பெருக்க வைத்தியர் அரசு
வைத்தியசாலையை பயன்படுத்துவது போல், ஆசிரியர் தனிப்பட்ட டியூட்டரி மாணவனை
உருவாக்க பாடசாலையை பயன்படுத்துகின்றனர். இது இன்று இலங்கையில் ஒரு
நோயாகிவிட்டது. இதன் மூலம் ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தல் என்பதை
படிப்படியாக கைவிடுகின்றனர். எனோதனோ என்று கல்வி கற்பிக்கு முறைக்குள்
நகர்ந்து செல்லுகின்றது. இதன் மூலம் ஆசிரியர் மாணவர் உறவில் மாற்றம்
நிகழ்கின்றது. இங்கு புனிமாக எண்ணிய கல்வி முறையில், வர்த்தக உறவு
எற்படுகின்றது. ஆசிரியர் மாணவர் உறவில் எற்படும் இந்த மாற்றம் வர்த்தக
எல்லையில், ஜனநாயகம் பற்றிய போலியான உணர்வுகள் எற்படுகின்றது. இது பொதுவான
சமூகத்தில் ஜனநாயகம் பற்றிய தப்பான வக்கிரமான விளங்களை
எற்படுத்திவிடுகின்றது. பாடசாலையில் ஆசிரியர் மாணவர் உறவு இதற்குள் மாறி
வரும் பொது, பணம் கொடுத்து ரியூசன் படிக்க முடியாத எழை மாணவன் கதி
பரிதபத்துக்குரியதாகி, அடிமைநிலை மேலும் அகலமாக்கின்றது. அந்த எழை அடிமை
மாணவன் பற்றிய ஆசிரியரின் மனப்பாங்கு, இகழ்ச்சிக்குரியதாக பரிணாமித்து
வருகின்றது.
இந்த நிலையில் உலகமயமாதல் பாடசாலைகளை தனியார் மயமாக்கி, கல்விக்கு கட்டணம்
அறவிட உலகளவில் அனைத்து நாட்டிடமும் கோருவதுடன், அதற்கான ஒப்பந்ததில்
கையெழுத்திடப்பட்டுள்ளது. எல்லாம் தனியார்மயம் என்பது, ஜனநாயகத்தின்
அடிப்படை அகாhரதி. ரியூசன் கல்விமுறை இதற்கு உறுதுணையாகவும் செயல்
வழிகாட்டியாகவும் உள்ளது. கற்றக் கொடுக்க பணத்தை வசூலி;க்கும் முறை மட்டும்
தான், பாடசாலைகளில் நடைமுறைக்கு வரமால் எஞ்சிக்கிடக்கின்றது. அதற்குரிய
பண்பாட்டு காலச்சார அடிப்படைகளை ரிய+சன் கல்வி, எற்கனவே உருவாக்கிவிட்டது.
தனிப்பட்ட ஆசிரியரிடம் அல்லது அவரை உள்ளடக்கிய ஒரு நிர்வாகிகளிடம்;
அல்லது, தனிப்பட்ட பாடசாலை முதலாளிகளிடம் பணத்தைக் கொடுத்து கல்வி பெறக்
கோரும் முறைக்கு இந்த ரியூசன் கல்வி இலகுவாக பாதை அமைத்திருக்கின்றது.
இன்று டொனேசன் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபா வசூலிக்கப்படுவது எல்லாம் இதன்
முன்னொடி. கல்வியை தனியார் மயமாக்க கோரும் உலகமயமாதல் நிபந்தனைக்கு, இது
தவிர்க்க முடியமால் பாதையை செப்பனிடுகின்றது. இந்த முறை இன்றைய தனிப்பட்ட
ஆசிரியரின் வருமானத்துக்கு வேட்டு வைக்கும். அரசு ஆசிரியர் என்ற அனைத்து
சமூக அடிப்படையும் இழந்து, தனிப்பட்ட முதலாளியின் கைப்பொம்மையாக
ஆசிரியர்கள் மாறுவது எதிர்கால நிகழ்ச்சியாகும். மாணவர்கள் பணத்தைக் கட்டி
படிக்கும் அவலமும், காசு கட்ட முடியாத மாணவாகள் கல்வி மறுப்பதும் எதிர்கால
நிகழ்ச்சியாக இருப்பதை யாரும் தடுக்க முடியாத, ஒரு சுயநலம் கொண்ட சமூக
அமைப்பை கட்டி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம்.
நமது கல்வியின் சரியான பாதை எது
எமது சரியான கல்வி என்பது குறைந்த பட்சம் எப்படி இருக்க வேண்டும். எமது
சமூக பொருளாதார தேவைக்குள்ளும், அதை வளர்த்தெடுப்பதை அடிப்படையாக
கொண்டிருக்க வேண்டும்;. கல்வி மக்களின் அடிப்படையான வாழ்வுடன் இணைந்தாக,
உழைப்புடன் நெருக்கமானதாக இருக்க வேண்டும். டொக்டர், ஏஞ்சினியர் கனவுக்
கல்விக்கு பதில், உழைப்பின் ஆதாரத்தின் மீதான கல்வியாக அமைய வேண்டும்;.
உழைப்பு உன்னதமானதாக மாற்றவும், அதை கற்பதை ஊக்குவிக்கவும் வேண்டும்;.
இதற்கு எமது மக்களின் உழைப்பின் வடிவங்கள், அதன் சமூக கண்ணோட்டங்களுக்கு
இசைவாக கல்வியை முற்றாக மாற்றி, அதன் உயர்ந்த கண்ணோட்டத்தை சமூக மயமாக்க
வேண்டும்.
கற்றல் கற்பித்தல் முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்க வேண்டும். மிகவும் ஆழமாக
புரிந்து கொண்ட வகையில், கல்வி அமைதல் வேண்டும்; அதாவது கல்வி மீதான
விருப்புடன் கூடிய, ஆழமான தேடுதலுடன் கூடிய சுயமான புரிந்துணர்வை உருவாக்க
வேண்டும்; சுய ஆர்வம், சுய தேடுதல் மூலமாக கல்வி கற்றல், கற்பித்தல் என்பது
மாற்றி அமைக்க வேண்டும்;; நூல்களை சுயமாக தேடி வாசிக்கும் முறைக்கு கல்வி
உயாத்தப்படவேண்டும்.
ஜனநாயகத்தை சமூக வாழ்வில் ஒரு வாழ்வுமுறையாக, அனைத்துறையில் கொள்ளுதல்
வேண்டும்;. மேற்கு மற்றும் இன்றைய எமத முறைக்கு மாற்றாக, சமுதாயம் உயர்
உலகப்பண்புகளை கைக் கொள்ளும் முறையை நோக்கி எமது கல்வி முன்னேற வேண்டும்.
கற்றல், கற்பித்தல், மீளக் கற்றல், வாசித்தல், விமர்சித்தல், தேடுதல்,
மறுத்தல், உருவாக்குதல் என்று நடைமுறை வாழ்வு சார்ந்து, ஒரு பரந்த தளத்தில்
மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் முதல் சமூக வரை விரிந்த தளத்தில்
கல்விமுறை அவசியமானது. இதன் மூலம்தான் எமது கல்வி முன்னேறவும், சமுதாயம்
உயர்ந்த நிலைக்கு வளர்ச்சி பெறமுடியும்; இலலாத வரை எமது கல்வி டொக்டர்
எஞ்சினியர் கனவுடன், வருடாந்தம் உருவாக்கும் 500 வெற்றிடங்களுக்காக, எமது
குழந்தைகளை வதைப்பதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும்
தவிர்க்க முடியாது மலட்டுத் தனத்தில் சிக்கி, அடிமையாக வாழ்வதை எம்மால்
தடுத்த நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் சுய சிந்தனையுள்ள, சமூக நலனை எமது
நலனாக கருதி அதில் தனிமனிதன் சுபீட்சமாக வாழும் ஒரு உன்னதமான சமுதாயம்
வேதனை அற்றது, துன்பமற்றது. அதை நோக்கி எமது கல்விக் கொள்கையை சிந்திக்க,
என்ன செய்வது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்கள் நண்பன்,,,,,,,
No comments:
Post a Comment